பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 23 ☾

இவர், அந்துால் முழுவதையும் படித்து வந்த போது, அந்நூலில் சங்கநூற் கருத்துக்கள் வருகையில் சுட்டிக் காட்டியது அவருக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

ஒரு நாள் அவர் தாம் பாடியுள்ள ஒருதுறைக் கோவை.” யிலிருந்து ஒரு பாட்டை இவரிடம் சொன்னார்; அம்புருப் பெற்ற (து) அரும்பென நீயும் அறிந்திலையே’ என முடியும் பாடல் அது. இதில் ஏதேனும் நயம் தெரி கிறதா?’ என அப்பெரும்புலவர் இவரிடம் கேட்டார்.

பூர்மத் ஐயரிடும் பிச்சையாகத் தமிழ் கற்றுவரும் இவர் சில கோவைகளை முன்பே பாடம் கேட்டிருந்தார். ஆதலின், அவ்வடியில் அமைந்த நயத்தை உணர்ந்தார்.

  • நீ கண்னை மூடிக்கொண்டாய்; மார்பைக் காட்டு கிறாய்; கண் மலரம்பு போல வருத்தும். அதை மூடிக் கொண்டாயே! உன் நகில்கள் அரும்பின் உருவை உடையன வாக அம்புபோல முனையுடன் இருக்கின்றனவே! அவற்றை மறைக்கவில்லையே!’ என்ற பொருள்பட அமைந்த பாடல் அது.
அம்புருப் பெற்றது அரும்பு’ என்ற இடத்தில் அம்பு உரு'ப் பெற்றது அரும்பு’ என்ற நயம் உள்ளது என இவர் சொன்னவுடன் சபாஷ் என்று இவருடைய முதுகில் தட்டிக் கொடுத்தார், சேது சம்ஸ்தான மகாவித்துவாள் அவர்கள்.

護 蠶 蠶 - இன்றும் அப்புலவர் பெருமான், கவர்னரது பெயருக்கு ஏற்றபடி தான தத்தன தானாந் தனதன என்ற சந்தக் குழிப்பில் நார்மன் எட்வர்டு மார்ஷ்பாங்க்ஸ் துரை முகில்” என்று வரும்படியாக இவர் பாடிய பாடலைக் கேட்டவுடன் சபாஷ் எனப் பாராட்டினார். எல்லோரும் மகிழ்ந்தார்கள்.

மறு நாள் நடைபெற்ற ஆராய்ச்சிக் கருத்தரங்குக்கு, பூரீமத் ஐயர் தலைமை தாங்கினார். அவரது தலைமையில் புலவர் பெருமக்கள் தங்களது ஆராய்ச்சி உரைகளை