பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் zsa

சென்னை மயிலாப்பூரில் சிம்ம்ம்போல் வாழ்ந்து வந்த வி. கிருஷ்ணசாமி ஐயர், இவருடைய ஆசானிடம் அன்பும் மதிப்பும் உடையவர். அவர்தம் மூத்த மாப்பிள்ளை தாம் ஆர். நாராயணசாமி ஐயர். மாப்பிள்ளை என்பது விவகார நிலைக்குத்தான் சரியேயோழிய உண்மையில் அந்தப் பேருபகாரியின் மூத்த பிள்ளை என்றே நாராயண சாமி ஐயரைச் சொல்ல வேண்டும். -

நாராயணசாமி ஐயர் திருவிடைமருதூரில் 1881-ஆம் ஆண்டு பிறந்தார். சென்னை அரசாங்கக் கல்லூரியில் படித்துப் பி.ஏ., பட்டமும் சட்டக் கல்லூரியில் சேர்ந்து :பி. எல்., பட்டமும் பெ ற் றார். 1908-ஆம் ஆண்டில்

வழக்கறிஞர் ஆனார். - -

பி.எஸ். சிவசாமி ஐயரிடத்தும், பிறகு எஸ். பூரீநிவாலை யங்காரிடத்தும் ஜூனியராக இருந்து சட்ட அறிவை மட்டுமல்ல, சமுதாயத்தில் பழகும் முறை, பெருந்தன்மை” கற்றோரை மதிக்கும் இயல்பு முதலிய நற்பண்புகளையும் பெற்றார். . . . . .

நட்பும், தயையும், கொடையும் பிறவிக் குணம், என்பது ஒளவை வாக்கு. * .

நாராயணசாமி ஐயர் தம் பிறவியிலேயே இந்த மூன்று நற்குணங்களு அமையப்பெற்ற செல்வராக விளங்கினார். -

இந்த வள்ளலுக்கு, இன்னாருக்கு இதைக் கொடுக்கப் போகிறேன் என்றோ, கொடுத்தேன்’ என்றோ சொல்லத் தெரியாது, இடது கைக்குத் தெரியாது வலது கையால் வழங்கத்தான் தெரியும் என்பார்கள். - .

மகாமகோபாத்தியாய எஸ். குப்புசாமி சாஸ்திரிகள், டி.எஸ். ராமசந்திர ஐயர், பூரீமத் ஐயர் போன்ற மொழி வல்லுநரும், எஸ். வரதாசாரியார் போன்ற சட்ட நிபுணர்

1945 டிசம்பர் 24-இல் காலமானார்.