பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289 நாம் அறிந்த கி.வா.ஜ.

தந்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஐய ரவர்களும் மகிழ்ச்சியுடன் நாராயணசாமி ஐயரின் வேண்டு கோளுக்கு இசைந்தார். அப்போது அங்கே இருந்த இவரைப் பார்த்தவுடன் வ ந் த வ ர் க ளு க் கு என்ன தோன்றியதோ, எங்கள் பத்திரிகைக்கு உதவி செய்ய் யாரேனும் இருந்தால் சொல்லவேண்டும்’ என்று ஐயரவர் களிடம் தெரிவித்தார்கள். உடனே, ஏன், என்னிடம் இவர் இருக்கிறார். கவிதை எழுதுவார். கட்டுரை, கதை எழுதுவார். ப்ரூஃப் நன்றாகவே திருத்துவார். முடியு மானால் இ வ. ைர ப் பயன்படுத்திக்கொள்ளலாமே.” என்றார். -

நாராயணசாமி ஐயர், மிகவும் நல்லதாகப் போயிற்று. எங்களுக்கும் இப்படி ஒருவர் வேண்டியது தான். என்னால் இயன்ற ஊதியம் தரவும் சம்மதிக்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொண்டார்.

அன்றே இவர் கலைமகள் தொண்டர் ஆனார். நல்ல வெள்ளைக் காகிதத்தில், ஒரு தனியான வடிவத்தில் கலைமகள் 1932, ஜனவரி மாதம் முதல் வெளி வரலாயிற்று, அதுபற்றிக் கல்கி அவர்கள் ஆனந்த விகடனில் கலைமகள் விஜயம்’ என்பதாக ஒரு கட்டுரையே எழுதினார். காந்தமலை முருகனின் அருள் தொண்டரான இவரது கலைமகள் வாழ்த்து முதல் இதழின் முதல் பக்கத்தையே அலங்கரித்தது. - -

“ பார்வளரும் அறுபத்து நான்குகலை யாங்கதிரைப்

- - பரப்பி ஒவாச் சீர் வளரும் நூறிதழ்சேர் வெண்கமலத் தவிசினிலே - சிறக்க மேவி ஏர் வளரும் அறிவுயர்வு பெறஅருள்செய் கலைமகளாம்

எம்பி ராட்டி வார்வளரும் இயலிசைகா டகத்தினைத் திசைவாழ - வணங்கு வோமே.”

என்பது அதில் முதல் பாடல். பூரீமத் ஐயர் எழுதிய