பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 288

கார் எனக் குறைந்துவிட்டது’ என இவரைப் புகழ்ந்து பேசவேண்டும் என வேடிக்கையாகச் சொன்னார் : அவ்வளவுதான்!

மறு நாள் ஒரு முதியவர் இவரிடம் சண்டைக்கே வந்து விட்டார். சபையில் பேசச் சொன்னால் எதை வேண்டு மானாலும் பேசிவிடுவதா? த்ைெளகம் பூரீநிவாலையங் கார் எங்கே? இவர் எங்கே? அதெல்லாம் உங்க தமிழோடு வைத்துக்கொள்ளும், ஐயா! இந்தச் சபையிலே நீர் இப்படிப் பேசியது தப்பு தப்புத்தான்’ என ஐயரவர், களைக் கண்டித்தாராம்.

“ஒவ்வொரு துறையிலும் அந்த அந்தக் காலத்திற் கேற்பப் புதிதாக முன்னுக்கு வரும் இளைஞர்களை நாம் பாராட்டி ஊக்கப்படுத்தத்தான் வேண்டும். கல்வி அமைச்சர் உம்மைப் பாராட் டி யது முற்றும் பொருத்தமே!” என்று ஐயரவர்கள் இவரைப் பாராட்டியபோது இவரது மகிழ்ச்சியைச் சொல்லவும்

வேண்டுமோ! - - .

X x X

ஒரு நாள் இவர் தம் ஆசானுடன் அமர்ந்து குறுந் தோகை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சென்னை லா ஜர்னல் அச்சுக்கூட அதிபரான முற்கூறிய பூரீ நாராயணசாமி ஐயர், ஐயரவர்களைக் காண வந்தார். தம் உறவினரான ராமசந்திரையருடன் கலை மகள்’ என்ற பெயரில் புதிதாகத் தமிழ் இலக்கிய மாதப் பத்திரிகை ஒன்றைத் தாம் ஆரம்பிக்க இருப்பதாகத் தெரிவித்தார். பிரஜோத்பத்தி ஆண்டு தை மாதம் (1932. ஜனவரி) அதன் முதல் இதழ் வெளிவர இருக்கிறது என்றும் சொன்னார், கலைமகளின் முதல் இதழுக்குக் கலைகள்” என்ற தலைப்பில் ஐயரவர்கள் ஒரு கட்டுரை எழுதித் தருவதோடு மாதந்தோறும் தொடர்ந்து ஒரு கட்டுரையும்,