பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287 நாம் அறிந்த கி.வா.ஜ.

பாரதியாரைப் போல் பாடல்கள் எழுதுகிறாரே!” என இவரைப் புகழ்ந்தார்.

விழா முடிந்தவுடன், பாரதியார் எங்கே? இவர் எங்கே? அவரோடு சேர்த்து இவரைப் பாராட்டுவதா?’’ எனச் சிலர் இவரது காதில் விழும்படி கல்வியமைச்சரிடம் குறை கூறினார்களாம். பூரீமத் ஐயரின் காதுக்கும் அந்தச் செய்தி எட்டியது. அவருக்குக் கல்வியமைச்சரின் பேச்சில் எந்தக் குறையும் தோன்றவில்லை; ஒரு வித்தையில் நூதனமாக முன்னுக்கு வருபவர்களை அப்படிப் பேசித்தான் பிரகாசப்படுத்த வேண்டும்” என்பது பூரீமத் ஜயரது கொள்கை. அவரும் கல்வித்துறையில் பணியாற்றியவர் தாமே!

தாம் கும்பகோணத்தில் இருந்தபோது, அப்படி ஒரு முறை பேசிவிட்டுச் சிலரின் கோபத்திற்கு ஆளான வரலாற்றையும் அப்போது ஐயரவர்கள் இவரிடம் சொன்னார்:

கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் மதுரையி லிருந்து வந்திருந்த பூச்சி(ரீநிவாஸ்) ஐயங்கார் சச்சேரி தடைபேற்றது. அவர் அப்போது பேரும் புகழும் பெறாத சிறு வயதினராக இருந்தார். பூரீமத் ஐயர், கச்சேரியின் முடிவில் அந்த இளம் வித்துவானைப் பாராட்டினார்:

சோழ நாட்டில் பரம்பரையாகச் சங்கீத வித்து வான்கள் வாழ்ந்து வரும் நகரம் இது. இன்று இங்கே பாண்டிய நாட்டிலிருந்து வந்து பாடிய இந்த இளைஞர் எங்கள் எல்லோரையும் மயக்கிவிட்டார். இந்த நகரில் அத்லெளகம் பூரீநிவாளையங்கார் என்ற ஒரு சங்கீத வித்துவான் இருந்தார். அவரை எல்லோரும் சீனுவையன் கார் என்றே அழைப்பார்கள். இந்த இளைஞராகிய பூரீநிவாளையங்கார் இந்த நகருக்கு வந்து எல்லோருக்கும் சங்கீதத் தேனைப் புகட்டிப் புகழ்பெறப் போகிறார் என்பதாலோ என்னவோ முன்னவர் பெயர் சீனுவையகி