பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

最簿直 - தாம் அறிந்த கி.வா.ஜ.

இவர் மிகவும் கவனமாகப் படித்துப் பிழை திருத்து வார் என்பதை இதோ இந்த நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்:

ஐயரவர்கள் தம் கட்டுரை ஒன்றில் மாலை நேரத்தில் சுமங்கலிகள் விளக்கேற்றினார்கள் என்று எழுதியிருந்தார். ஆனால் ப்ரூஃபில் அந்தப் பெண்கள் அமங்கலிகள்’ ஆகிவிட்டார்கள்! அச்சு மை, அளவுக்கு மிஞ்சிப் பதிந்து விட்டதனாலோ என்னவோ முன் ப்ரூஃபில் இது இவர் கண்ணில் படவில்லை! ஃபாரம் ப்ரூஃப்” வரைக்கும் அந்தப் பிழை வந்துவிட்டது. என்றாலும் நல்ல வேளையாகக் கவனித்து அதைத் திருத்திவிட்டார் இவர்.

அச்சுக் கோப்பவர்கள் யந்திரம்போல் வேலை செய்பவர்கள்; பொருளில் சிந்தை செலுத்தாமல் கூர்ந்து கவனியாமல் அடுக்கியபோது விளைந்தது இந்த வகைப் பிழை.

வரிகள் மிகாமல் இருக்க, நீண்ட சொற்களைத் குறைக் கவும் மற்றும் பல நுட்பங்களைக் கண்டுகொள்ளவும், அதே அச்சகத்தில் இருந்த டி. எஸ். சுப் பிர ம ணி ய. சாஸ்திரிகள் என்பவரிடத்திலிருந்து இவர் நிரம்பக் கற்றுக்கொண்டார்.

X X ,3 X

இவர் ஐயரவர்களிடம் வந்து சேர்ந்ததிலிருந்து முறை. யாகத் தமிழ் நூல்கள் அனைத்தையும் கற்று வந்தார். என்றாலும், வித்துவான் தேர்வு எழுதும் வயது. வரவில்லை. --

ஆசிரியராகவோ, கல்லூரியில் சேர்ந்து படிக்காமலோ ஒருவரி, வீட்டிலிருந்தே படித்து நேர்முகமாக வித்துவான் தேர்வு எழுத வேண்டுமென்றால் 25 வயது ஆகியிருக்க வேண்டுமென்பது சென்னைப் பல்கலைக் கழக விதியாக இருந்து வந்தது. எனவே, உரிய வயதில் ப்ரிலிமினரி’ என்ற முதல் தேர்வில் தேறியபின், இரண்டு ஆண்டுகள் கழித்தே வித்துவான் ஃபைனல் என்ற முழுமையான