பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 30 &

என்பதை அப்போது நாமே ஒரு முறை நினைவுபடுத்திக் கொண்டால் போதும்; நாம் செய்யாத தப்புக்கே இவன் நம்மை இப்படித் திட்டுகிறானே நாம் செய்திருக்கும் தப்புக்களை இவன் அறிந்தால் நம்மை இன்னும் எப்படி யெல்லாம் கோபித்துக்கொள்வானோ? என்ற நினைப்பு வந்தால் போதும்...நமக்கு அப்போது கோபமே வராது” என இப்படி நம் வாழ்வுக்குப் பயன் தரத் தக்க பல உபதேச

மொழிகளை அருள்வார்,

அவரது உபந்நியாச முறையே ஒரு தனி அழகு பெற்றது. பூர் சந்திரமெளளிசுவரருடைய பூஜையை முடித்துக்கொண்டு, உபந்தியாசம் செய்வதற்காக மேடை மீது வந்து அமர்வார். உலக நலனுக்காக அவர் செய்யும் பூஜையே பின் வரப்போகும் உபதேச மொழிகளுக்கு ஒரு முகவுரையாக விளங்கும். - -

உபந்நியாசத்திற்குப் பூர்வாங்கமாக அவர் அதுசரிக்கும் மெளனமே ஒரு பெரிய உபதேசமாக அமையும். - -

இந்த மெளனத்தில் லயித்த மக்கள் அவர் பேச ஆரம்பித்தவுடன், அந்தப் பேச்சில் மெய்ம்மறந்து

லயிப்பார்கள்.

மயிலாப்பூர்ப் சம்ஸ்கிருதக் கல்லூரியில் தங்கியிருந்த போது, பெரியவர் பேச ஆரம்பித்துவிட்டால் போதும்; அன்பர் கி.வா.ஜ. நீளமான நோட்டை, தம் துடைேேத வைத்துக்கொண்டு அவரது உபந்நியாசத்தை ஒரு வார்த்தை விடாமல் வ. டி .ெ வழு த் தி லே ேய எழுதிக் கொள்வார். இரவு வீட்டிற்கு வந்தவுடன் அன்றைய பிரசங்கம் முழுவதையும் வேறு தாளில் நன்றாகத் திரும்பவும் எழுதுவார். - . . காஞ்சிப் பெரியவரின் உயங்கியாசங்கள் புத்தக உருவாதல் : இப்படி இவர் எழுதிய பெரியாரின் உபந்நியாசங்கள் *நன்மொழிகள் என்றும், சங்கர விஜயம் என்றும் இரண்டு புத்தகங்களாகக் கலைமகள் வெளியீடாக வந்து