பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

307 நாம் அறிந்த கி.வா.ஜ.

வேற்புப் பத்திரம் ஒன்றைப் பாடல்களாகவே எழுதி வாசித்தார் அன்பர் கி.வா.ஜ.

26-11-32-இல் பெரிய வர் திருவேட்டீச்வரன் பேட்டைச் சங்கர மடத்திற்கு எழுந்தருளினார். அத்தலத் தின் பெருமையைப்பற்றி ஐயரவர்கள் பேசினார். அந்த இடத்திலும் இவர், பெரியவரைத் தரிசனம் செய்து கொண்டார். இவரது குருபக்தி பெரியவரை மிகவும் கவர்ந்தது.

பெரியவர் சென்னையில் தங்கியிருந்த காலத்தில் இவரும் நாள் தவறாமல் அந்த முனியுங்கவரைத் தரிசனம் செய்துகொள்ளப் போய்விடுவார். மிகுந்த நினைவாற்றல், பேச்சாற்றல் படைத்தவர் காஞ்சிப் பெரியவர். மிகவும் நுட்பமான விஷயங்களையும் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்வார்.

உபந்நியாசத்தின் தொடக்கத்தில் அவர் என்ன சொல்லப் போகிறார் என்று தெரியாது. அதனால், கேட்பவர்களிடையே ஆவல் அதிகமாக இருக்கும்.

சில சமயங்களில் பெரியவர் ஒரு கருத்தைச் சொல் வதற்கு முன்னால் அதற்கு எதிரான கட்சியைத் தெளிவாகச் சொல்வார்; அதுதான் உண்மையென்று தோன்றும்படி சொல்வார். பிறகு முதலில் கூறிய அத்தனை ஆட்சேபங்களுக்கும் சமாதானம் சொல்லி முடிப்பார்.

  • ஒருவன் நம்மைக் கண்டபடி திட்டுகிறான். நாம் எந்தத் தப்பும் செய்யவில்லை. அதனால் நமக்குக் கோபம் வந்துவிடுகிறது. கோபம் வருவது இயற்கைதான்; என்றாலும், அப்போது நமக்குக் கோபம் வராமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?’ என்று நம்மையே. கேட்டுச் சிறிது சிந்திக்கவிடுவார். அடுத்து அவரே. சொல்வார்:
அவன் சொல்கிற தப்பை தாம் செய்யாதிருக்கலாம். ஆனால் நாம் என்ன என்ன தப்புக்கள் செய்திருக்கிறோம்.