பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 30 Ꮾ

கலைமகளையும், தலைமகளையும் இவர் கைப் பிடித்தது. 1932 - இல்தான். டாக்டர் பட்டம் பெற்ற தமிழ்த் தாத்தா :

3-8- 32 அன்று சென்னைப் பல்கலைக் கழகத்தினர் l-iršu–fr sy&li coll_Gir#siř (Doctor of Literature) srsť sp கவுரவப் பட்டத்தை ஐயரவர்களுக்கு வழங்கிச் சிறப்பித் தனர். - -

ஐயரவர்கள் வேடிக்கையாக, எனக்கு வைத்தியம் தெரியுமா, மருந்து தெரியுமா? எனக்குப் போய் டாக்டர் பட்டம் கொடுக்கிறார்களே; எனக்கு இது எதற்கு?” என்று இவரிடம் சிரித்துக்கொண்டே சொன்னார்.

அந்தப் பட்டம் பூரீமத் ஐயருக்குக் கிடைத்ததால் பெரு மகிழ்ச்சியில் திளைத்த இவர், வைத்தியர், புலவர் என்ற பொருள் :ப ண் டி த ர்’ எ ன் ற சொல்லுக்கும் உண்டல்லவா? நீங்களும் பெரிய பண்டிதர் தாமே! காலும், கொம்பும், புள்ளியும் இழந்த எத்தனை எழுத்துக்களைக் கஷ்டப்பட்டுச் சரிப்படுத்திப் பாடல்களை நேராக்கி இருக்கிறீர்கள்: அதை வைத்துத்தான் டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள்’ என நயம்படச் சொன்னதைக் கேட்டு துரீமத் ஐயர் மகிழ்ந்தார்.

அவ்வாண்டு இறுதியில் காமகோடி பீடத்துச் சங்கரா சார்ய மூர்த்தியாகிய பூரீமத் சந்திரசேகரேந்திர சுவாமிகள் சென்னை மாநகருக்கு முதல் முறையாக விஜயம் செய்: தார். ஏற்கனவே அக்காஞ்சி முனிவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 34-ஆம் ஆண்டு விழாவில் (8-6-1925) ஐயரவர்களுக்கு இரட்டைச் சால்வையும், தோடாவும் அனுப்பி, தாகதிணாத்ய கலாநிதி என்ற பட்டத்தையும் அளித்துக் கவுரவித்திருந்தார்.

பின்பு 1932 புரட்டாசி மாதம் காஞ்சிப் பெரியவர்கள் சென்னைக்கு வந்தபோது அவருக்குக் கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. நகர மக்களின் சார்பாக வர