பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305 நாம் அறிந்த கி.வா.ஜ.

அந்தக் காலத்தில் பத்திரிகை அச்சிடுவது பெரும்பாலும் வழக்கமில்லை. கடிதந்தான் எழுதுவார்கள்.

இவருடைய தகப்பானருக்கு, பெண்ணின் பெரிய தகப்பனார் தாம் எழுதிய முகூர்த்தப் பத்திரிகையில், முறையாக, :ஈசுவர கிருபையை முன்னிட்டுப் பெரியோர் களால் நிச்சயிக்கப்பட்டு முகூர்த்தம் 13-6-32 அன்று சோமவாரம் (ஆங்கிரஸ் வைகாசி 31) அன்று கன்யா வக்னத்தில் மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோவில் த்ெரு. 57-ஆம் நெம்பர் கிருகத்தில் நடத்துவதால் தாங்கள் குடும்ப சமேதராய் மூன்னாடியே வந்திருந்து முகூர்த்தத்தை நடப்பித்துத் தம்பதிகளை ஆசீர்வதிக்கு மாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

X. - . х ,X . கடிதம்’ பார் த் த வுட ன் இ வ ரு ைட ய பெற்றோர் பெரிதும் மகிழ்ந்தார்கள்; துறவியாக லிரும்பிய தம் மகனுக்கு அறிவு புகட்டி, அவனை இல்லறத் தினை மேற்கொள்ளும்படி செய்த ஐயரவர்களை வாழ்த்தி, திருமணத்திற்குச் சில நாட்கள் முந்தியே சென்னை வந்து சேர்ந்தார்கள். - .

திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பிறகு ஒரு நாள், முன்பு சம்பந்தம் செய்துகொள்ள வருவதாகச் சொல்லி வாராதிருந்த பெண்ணின் தந்தையைக் சந்தித்த போது அவரை, ஏன் வரவில்லை?” என்று கேட்டு விட்டார் இவர். அவர் வாய்மூலமே விஷயம் தெரிந்தது: அந்தப் பெண் மூளை வளர்ச்சி இல்லாதவள் என்பதால் ஆயர்வர்களைப் பார்க்கத் தயங்கி வரவில்லையாம்.

அப்போது. ஏண்டா கடந்து போனதை அவருக்கு நினைப்பூட்டினோம்?’ என்று இவருக்கே பட்டது: என்றாலும், தம்மைக் காப் பா ற் றி வரும் தம் குருசரணத்தையும், குகன் சரணத்தையும் ஒருசேர தினைந்து மனம் நெகிழ்ந்தார்.