பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லததில் 314

பிள்ளையவர்களிடம் ஏதோ காரணத்தைச் சொல்லி விட்டு, நடுநடுவே வெவ்வேறு இடங்களுக்குப் போய் வருவார். ஒரு முறை அவருக்குத் தெரியாமல் அவர் பிரசங்கம் செய்யும் இடத்திற்குப் பிள்ளையவர்களும் சென் றார்கள். மறைவாகவே இருந்தும் கேட்டார்கள். காப்பிய நயத்தை, கேட்பவர்கள் அநுபவிக்கும்படி தம் மாணவர் பேசியதைக் கேட்டு, தாமே அவரை இன்னும் ஊக்குவிக்க வேண்டும் என எண்ணினார். •

கவிராயருக்குச் சொல்லி வந்த கம்பராமாயணப் பாடம் முடிந்தவுடன் கவிஞர் கோமானே ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் பிரசங்கம் செய்யும்படி தம் மாணவரைப் பணித்தார். கவிராயரும் உற்சாகத்துடன், பயமில்லாமல் நன்கு பேசினார். - -

முடிவில் பிள்ளையவர்கள் சாமிநாதக் கவிராயருக்குத் தம் கையினால் சால்வை’ ஒன்றை வழங்கி, கம்ப ராமாயணப் பிரசங்க வித்துவான்’ என்ற பட்டத்தையும் அளித்தார் அதுமுதல் எந்த மேடையில் பிரசங்கம் செய் தாலும் முதலில் தம் ஆசிரியரது வணக்கமாக ஒரு பாடலைச் சொல்லிவிட்டுத்தான் தம் பேச்சைத் தொடங்குவாராம் சாமிநாதக் கவிராயர், -

இந்தச் செய்தியை பூரீமத் ஐயரிடமிருந்து இவர் அறிந் திருந்தார்; அவரிடம் தாம் வராமல் இருந்திருந்தால் தம் நிலை எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்த்தார். :பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்’ எனக் காரைக்கால் அம்மையார் போல் இவர் காந்தமலையானிடம் வேசாறி - நின்றவராயிற்றே! ரீமத் ஐயரிடம் தம்மைக் கூட்டி வைத்த முருகன் திருவருளை நினைந்து உருகினார்.

இனிமேல் தாம் எந்தக் கூட்டத்தில் பேசுவதாக இருந் தாலும் முதலில் முருகனையும், தம் ஆசிரியப்பிரானையும் வணங்கிவிட்டே தம் பேச்சைத் தொடங்குவது எனத் தீர்மானித்துக்கொண்டார். ... ‘