பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்துகொள்ளவும் வேண்டிய நிலை இவருக்கு இருக்க வில்லை. செய்யுளியல், அகப்பொருள் வினாக்களுக்கு எல்லாம் இவர் சொந்தமாகவே, விடைக்குப் பொருத்த மான மேற்கோள் பாடல்களை எழுதினார். விடைத் தாள்களைத் திருத்தியவர்கள் வேண்டுமானால் அந்தப் பாடல்கள், எந்த ஊர் முருகன் கோவையைச் சேர்ந்தவை? என்று புரியாமல் திணறியிருக்கலாம்.

சென்னைப் பல்கலைக் கழகத் தேர்வு முடிவுகள் 18-5-33-இல் வெளியாயின. அவ்வாண்டு தமிழ் வித்துவான் இறுதித் தேர்வில் இவர் முதல் வகுப்பில், முதன்மையாகத் தேர்ச்சி பெற்றார். இது எல்லோருக்குமே மகிழ்ச்சியாக இருந்தது.

x .. X 家 ஆசானிடம் கேட்ட அருஞ் செய்தி : - க வி ளு ர் .ே காமா ன் பி ள் ைள ய வ ர் க ள் கம்பராமாயணத்தை முழுமையாக ஒன்றன்பின் ஒன்றாக மூன்று பிரதிகள் தம் கையினாலேயே எழுதினாராம். ஒரு பிரதியைமட்டும் தம்மிடம் வைத்துக்கொண்டு மற்ற இரண்டையும் தம் மாணவர்கள் இரண்டு பேரிடம் கொடுத்தாராம். - .

அவ்விதம் பிள்ளையவர்களிடமிருந்து கம்பராமாயணப் பிரதி ஒன்றைப் பெற்றுக்கொண்டவர்களில் ஒருவர்தாம் இயல்பான இசைஞானம் உள்ள சாமிநாதக் கவிராயர் என்ற புலவர். அவர் தம் ஊரான திருவிழிமிழலையில் இருந்த தமிழ் அறிஞர்களிடம் சில நூல்களைப் பாடம் கேட்டிருந் தார். பிறகு பெரிய புராணம், கம்பராமாயணம் ஆகிய வற்றைத் திரிசிரபுரம் வந்து புலவர் சிகாமணியான பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டார்.

கவிராயரோ படிப்பு முடிவதற்குள் பிரசங்கத்துக்குக் கிளம்பிவிட்டார். பிள்ளையவர்களுக்குத் தெரிந்தால் சினம் கொள்வாரோ என்கிற பயம் . வெட்கம்; எனவே, நா-20