பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 312

முத்துசாமி ஐயர் போன்ற இவர்களெல்லாம் பெரும் பெருந் தர்மம் செய்திருக்கிறார்கள். - - * * * *

“இவர்கள் பணக்காரர்களாகவும் இ ரு ந் தா ர் க ள்; தர்மமும் செய்தார்கள். இவர்களைப் போன்ற பணிக் காரரா, சாமிநாதையர்? மிக ஏழையாக இருந்து தமிழுக்கே வாழ்க்கையை அர்ப்பணித்து, பழந்தமிழ் நூல் களை உலகத்துக் கிடைக்கும்படியாகச் செய்த தாத்தா. தாதா. பரோபகாரம் வேறு உண்டா? தமிழ்ப்பண்டிதராக இருந்தார். அந்த உத்தியோகத்தில் அவர் என்ன சம்பாதித்திருக்க முடியும்? இருந்தாலும், தர்மத்தை விட வில்லை. அவர் சிவபக்தர் அல்லவா? கடுங்கோடையில் வருகிற சிவனடியார்களின் தாக சாந்திக்குத் தண்ணீர்ப் பந்தல் வைத்தார். இது எவ்வளவு சூட்சுமமான தர்மம், பாருங்கள்! -

இங்கே இருக்கிற உங்களுக்கெல்லாம் இது தெரியுமோ, தெரியாதோ, இன்று இங்கே கி. வா. ஜகந் நாதன் இருந்திருந்தால் இதைக் கேட்டு மிகவும் ரசித்துப் பரவசப்பட்டிருப்பான்’ என்றார் பெரியவர். ஐயரவர் களிடமும் இவரிடமும் பெரியவருக்கு இருந்த பேரன்பு எத்தகையதென இதிலிருந்தே விளங்கும். - x - x - х

வித்துவான் தேர்வில் முதலாக வந்தமை : -

1933-ஆம் ஆண்டு இவர் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் வித்துவான் ஃபைனல் (முழுமைத்) தேர்வு எழுதினார். தமிழ்த் தொண்டிலேயே மூழ்கி, பக்கம் பக்க மாக அழகாக எழுதிப் பழகிப் போன இவருக்குத் தேர்வு ஜுரம் ஏற்படவில்லை. வினாக்களுக்குப் பாட நூலில் உள்ளது. போன்றே விடை எழுதவும், அதிலுள்ள பாடல் களையே மேற்கோள் காட்டவும் அவற்றை மனப்பாடம்

  • கொடை வள்ளல்