பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.11 நாம் அறிந்த கி.வா.ஜ.

எழுதிக்கொள்ளும்படி பணித்தார். அப்போதுதான் தாம் (லாங் ஹாண்டிலேயே) முன்பு பெரியவருடைய உபந்தியா சத்தை எழுதியதைக் குறிப்பிட்டு, நீங்கள் தினமும் மாலையில் இங்கே வந்து பெரியவர்களின் உபந்நியாசத்தை எழுதித் தரவேண்டும். இரவு என் விட்டிற்கு வர வேண்டாம். காலையில் ‘உங்களுக்குத் தனியே பாடம் சொல்கிறேன்” என்றார்.

மயிலாப்பூரில் பெரியவர் (1957.58) நிகழ்த்திய உபந் நியாசங்களையும், வேறு இடங்களில் நிகழ்ந்த சிலவற்றை யும், சுருக்கெழுத்தில் எடுத்துத் தட்டெழுத்தில் பிரதி செய்து கொடுக்கும் பாக்கியம் இவரது மாணவனாக நான் இருந்த காரணத்தினால் எனக்கும் கிடைத்தது. அவற்றை ஒழுங்குபடுத்தி, ஆசார்ய சுவாமிகள் உபந்தியாசங்கள் என்ற தலைப்பில் நான்கு தொகுதிகளைக் கலைமகள்’ வெளியீடாகக் கொண்டுவந்தார்.

ஒரு நாள் பிரசங்கத்தில் காஞ்சிப் பெரியவர் சொன் னார்: நான் ஒரு வருஷம் சிவராத்திரிக்குக் காளஹஸ்தி போயிருந்தேன். சிவராத்திரிக்கு மறு நாள் சுவாமி காளஹஸ்தி மலையைச் சுற்றி வருவது உண்டு. மாசி மாதம்-கடுங்கோடை ஆரம்பம்-அந்த வெயில் காலத்தில் சுவாமி 18 மைல் சுற்றி வரவேண்டும். மலையைச் சுற்றி யிருக்கும் இடம் என்றால் கேட்கவே வேண்டாம், அங்கே இருக்கும் வெயிலுக்கு! அந்த மலையைச் சுற்றிச் சுவாமி வரும்போது கடுமையான வெயில். நடுவில் ஓரிடத்தில் ஒரு தண்ணிர்ப் பந்தல் இருந்தது.

எளிய ஆசான் கொடைவள்ளல் ஆனார் :

யார் வைத்திருக்கிறார்கள் என்று விசாரித்தேன். உ. வே. சாமிநாதையர் வைத்திருக்கிறார் என்றார்கள்.

தருமமிகு சென்னை என்பார்கள்: இங்கே பச்சையப்ப முதலியார், மனலி முதலியார், கிருஷ்ணசாமி ஐயர்,