பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 3.16.

தமிழ் அறிஞர்களும் பரிசு பெற்ற இவரையும், அளிப் பவரையும் அக்கூட்டத்தில் சிறப்பித்துப் பேசினார்கள். கடைசியில் இவர் நன்றியறிதலைச் சொன்னார். முதலில் முருகப்பெருமான் வணக்கம்: .

வரங்கொண்ட உமைமுலைப்பால் மணங்கொண்ட செவ்வாயும் பரங்கொண்ட களிமயிலும்

பன்னிரண்டு கண்மலரும் சிரங்கொண்ட மறையிறைஞ்சும் சேவடியும் செந்துாரன் கரங்கொண்ட் வேலும்என்றன்

கண்ணைவிட்டு நீங்காவே.'”

இப்பாடல் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்து பூரீ சுவாமிநாத தேசிகமூர்த்திகளால் இயற்றப் பட்டது. திருச்செந்தில் கலம்பகத்தில் உள்ளது.

இதனைக் கணிரெனத் தம் வெண்கலநாதக் குரலில் இவர் பாடியபோது சபையே மெய்சிவிர்த்து ஒருமுனைப் பட்டது. ; :

அடுத்து ஆசிரியப்பெருமான் வணக்கம்:

- கலையேறும் நெஞ்சினேன்

கற்றமிழைக் கற்றே அவையேற வைத்தருளும்

அண்ணல்-சுவையேறு செந்தமிழ்ப்பன் னுனல்விளக்கும்

சீர்ச்சாமி காதகுரு - அந்தளிர்த்தாள் சென்னிக்(கு)அணி, : தம் குரு வணக்கமாக இந்த வெண்பாப் பாடல், இவர் சொந்தமாக இயற்றிக்கொண்டது.

அடுத்து அன்று புதன்கிழமையாதலால், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள்.