பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.17. நாம் அறிந்த கி.வா.ஜ.

இன்று புதனும் கிடைத்தது. இது என்னுடைக ஆசிரியப் பெருமானுடைய ஆசியே’ என்பதாகத் தம் உரையைத் தொடங்கிக்கொண்டு பேசினார். முடிக்கும்போது தம் ஆசிரியரது தமிழ்த் தொண்டுபற்றியும், பனசைக் காசி மடாலயத் தலைவர் தமிழ் வளர்ச்சிக்குச் செய்துவரும் பணிகள் குறித்தும், விழாத் தலைவர் குறித்தும் தாம் இயற்றிய ஐந்து வெவ்வேறு பாக்களை உணர்ச்சியோடு படித்து முடித்தார்.

இவரது பேச்சைக் கேட்டு விழாவுக்கு வந்திருந்த அத்தனை பேரும் மகிழ்ந்து போனார்கள். நேஷனல் காலேஜ் முதல்வர் இவரது கையைப் பிடித்துக்கொண்டு பாராட்டினார்; ஐயரவர்களிடம், என்னை மன்னிக்க வேண்டும். இவரது உருவத்தைப் பார்த்து அலட்சியமாக இருந்துவிட்டேன். அடடா இன்று இவர் பேசிய பேச்சுக்கே ஆயிரம் ரூபாய் தரலாமே!” என இவரைப் புகழ்ந்தும் கூறினார். . .

  • அதனால் என்ன? இவருடைய தகுதியை முன்பே, அறிந்தவன் நான்; ஆதலால்தான் வந்தவுடன் விசாரித் தேன்’ என்றார் ஐயரவர்கள். - c. - தம் மகன் அவையோரால் போற்றப்படுவதையும், பரிசு பெறுவதையும் கண்டு இவருடைய தந்தை பெரிதும். மகிழ்ந்தார். - நேஷனல் காலேஜ் ஹாஸ்டலில் இவர்களுக்கு விருத்து உபசாரம் நடந்தது. ‘. . . .

மறு நாள் ஐயரவர்களுடன் இளமைக்காலத்தில் தம்” தந்தையாருடன் வசித்த அரியலூருக்கு இவரையும் அழைத்துச் சென்று, தாம் ஒடி ஒளிந்து விளையாடிய’ கோவில் மண்டபம் முதலியவற்றைக் காட்டி மகிழ்ந்தார். இவருடைய மனைவி அப்போது கும்பகோணத்தில் இருந்தாள். இவர்கள் வீட்டுக்கு அவள் வராத சமயம் அது. தம் மனைவியைப் பார்த்துவிட்டு அப்படியே