பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

841. - - - நாம் அறிந்த கி.வா.ஜ.

வாரப் பத்திரிகையான குமுதம் 1971-இல் அபூர்வச் சத்திப்பு’ என்னும் ஒரு தொடரை ஆரம்பித்தது. வாசகர் களிடையே இத் தொடர் உள் ள க் கிளுகிளுப்பை உண்டாக்கியது. அதில் இலக்கிய சமயத் துறையைச் சேர்ந்த இவரும், சினிமாத் துறையைச் சேர்ந்த செல்வி ஜயலலிதாவும் உரையாடியது இரு மாறுபட்ட வாழ்க்கை அமைந்தவரின் அநுபவங்களை உணர்த்தியது. இருபெரும் பக்திச் சொற்பொழிவாளரின் பரஸ்பர அன்பு: மோகனூர்க் காந்தமலையானிடம் இவரைப் போன்றே அன்பு கொண்டு அவனது கோவிலுக்கு மாதந்தோறும் தவறாமல் .ெ ச ன் று த ங் கி அருணகிரிநாதரின் பெருமையையும், அவர்தம் திருப்புகழின் இனிமையையும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார் சிறந்த சமயச் சொற்பொழிவாளரான முருகபக்தர் ஒருவர். நாளடையில் அந்த வட்டாரத்திலேயே அவருக்குத் தனிமதிப்பு ஏற்பட ல்ாயிற்று. அதனைப் பயன்படுத்திக் காந்தமலைக் கந்தன் கோவிலின் நிர்வாகம் திறம்பட நடைபெறுவதற்கு அவர் வழிகோலினார். அந்தச் சிறிய குன்றின் அடிவாரத்தில் அருணகிரிநாதருக்கு நினைவுச் சின்னமாக அருணகிரிநாதர் அறச் சத்திரம் ஒன்றினைக் கட்டினார். அந்தக் காந்த, மலைப் பக்தர்தாம் திருப்புகழ் அமிர்த” அருள் மொழியரசு திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள்.*, இரண்டு பேர்களுமே முருகன் அடியார்கள் அல்லவா? தமிழ் இலக்கியத்துறை நண்பர்கள் என்பதைவிட முருக. பக்தர்கள் என்பதில்ேதான் இருவருக்கும் தொடர்பு அதிகம். வாரியார் சுவாமிகளின் நட்பு : - *

வாரியார் சுவாமிகளுக்கும் இவருக்கும் நெருங்கிய பாசப் பிணைப்பு உண்டு. தாம் சென்று வந்த தலங்களின் பிரசாதங்களை அனுப்பி வைப்பார் அவர்; பல

  • கரூர் பொன்னுசாமி. ஆனந்த விகடன் 21.10.10

இதழில்.