பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் •, - - 密4母

தமிழறிஞர்கள் ஒப்புக்கொள்ளாதவை என்னும் புறக்கணிக்கப் பெற்றிருக்கும்; தமிழுக்கே பெருங்கேடு வராமல் தடுத்தவர்களில் அன்பர் கி.வா.ஜ., அவர்களும் ஒருவர். இந்த வகையில் எழுந்த அவர் படைப்புகள் எங்கும் பரவி எல்லோராலும் வரவேற்கப் பெறுவது யாவரும் அறிந்ததே. o

நைான் முன்னே கூறிய பாராட்டு விழாவில், ஐயரவர் களிடம் கி.வா.ஜ. அவர்கள் எழுதுவித்த புதிய துணுக்க உரைக் குறிப்புகளைக் கேட்டு, நச்சினார்க்கினியனே!” என்று இவரை அவர் புகழ்வதுண்டு என்றும் அறிந்தேன். கி.வா.ஜ. அவர்கள் இலக்கியங்களைப்பற்றி முறையன் கவும், முன்னேற்பாடாகவும் குறித்துக்கொண்டு வந்து கருத்துக்களைப் புதிய புதிய கோணத்திலிருந்து கவனித்துப் பழைய பாட ல்க ளி ன் ஆழத்தை விளக்கும்போது கூட்டத்திலுள்ள எல்லோரும் வியந்து நிற்பதைப் பலமுறை நான் கண்டிருக்கிறேன். பழைய தமிழ் அறிஞர்போல் எந்தப் பாடலையும் விரித்துப் பொருள் சொல்லும் ஆற்றலையும், அவற்றையெல்லாம் நினைவிலே வைத்துக் கொண்டிருக்கும் திறனையும் அடிக்கடி இரட்டுற மொழிந்து, கூடியிருப்பவர்களையெல்லாம் இன்பத்தில் ஆழ்த்தும் சிறப்பினையும் அன்பர் கி.வா.ஜ. அவர்களிடத் தான் எப்போதும் நாம் கண்டு மகிழலாம். அவரைப் பழந்தமிழின் விளக்கமாகவும், புதிய தமிழின் உயிர் நிலையாகவும் கண்டு நானும், கி.வா..ே வாழ்க! வாழ்க! வாழ்க’ என்று வாழ்த்திப் பெருமகிழ்ச்சிகொள்கிறேன்.’

இப்படிப் பேரறிஞர் தெ பொ. மீ., அவர்கள் குறிப்பிடு கையில், சில ஆண்டுகளுக்கு முன்னே கி.வா.ஜ. அவர் களுக்கு அவர் ஊரிலேயே ஒரு பாராட்டு விழா நடந்தது. ஏதோ என்னுடைய நல்ல காலம் அதில் தலைமை பூணும் வ்ாய்ப்பினைப் பெற்றேன்’ எனக் குறிப்பிட்ட சம்பவம் 1957-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதிதான் நடை பெற்றது. அதுவும் காந்தமலையான் திருவருள் போலும்!