பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாம் அறிந்த கி.வா.ஜ.

அன் பர் கி.வா.ஜ.வுக்குக் கி டை த் த து. அ ன் பர் கி.வா.ஜ. எழுதிய கலைஞன் தியாகம் என்ற சிறு கதையை நான் எப்போதும் மறப்பதில்லை. டாக்டர் ஐயரவர்கள் புதிய இலக்கிய வகைகளில் தொடக்கக் காலத்தில் ஈடுபட்டதில்லை; ஆனால் யாரையும் அதிலே ஈடுபட வேண்டாமென்று சொன்னதும் இல்லை.

இருந்தாலும் அன்பர் கி.வா.ஜ., அவர்கள், ஐயரவர் களின் உள்ளத்தின் போக்கை அறிந்து, புதிய இலக்கிய வகைகளைப் படைக்கும் திறனைத் தமக்குள்ளேயே அடக்கிக்கொண்டு ஐயரவர்களை வழிபட்டு வந்தார். இது ஒரு பெரிய தியாகந்தான். இதன் பயனாக ஒரு பெரிய புரட்சியே நடைபெற்றது எனலாம்.

பையப் பைய ஐயரவர்கள், புதிய இலக்கியப் படைப்பின் இன்பத்தையும், சிறப்பினையும் தம்முடைய சீடருடன் அமர்ந்து, அதனை வாழ்த்தி வளர்க்கவும் தொடங்கிவிட்டார். புறநானூற்றிற்கு ஐயரவர்கள் எழுதிய முன்னுரையினையும் பின்னர் ஐயரவர்கள் எழுதிய என் சரித்திரம்’ முதலியவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நன்கு விளங்கும். ஐயரவர்களே இந்தப் புது முயற்சியில் ஈடுபட்டதால் இந்த முயற்சிக்கு எங்குமிலாத ஒரு புகழ் வந்து சேர்ந்தது.

மணிமேகலை’யைப்பற்றி ஐயரவர்கள் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புகளை ஒப்பு நோக்கினாலும் இந்த உண்மை நன்கு புலனாகும். இவ்வாறு பழந்தமிழே புதிய தமிழை வாழ்த்துமாறு செய்த ஒரு பெருமை அன்பர் கி.வா.ஜ.வுக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல், ஆழ்ந்து அகன்று பழந்தமிழ் இலக்கிய அறிவு படைத்த கி.வா.ஜ. அவர்கள் இந்தப் புதுவகை இலக்கியப் படைப்பில் ஈடுபட்டதால், பழந்தமிழ் அறிஞர் கூட்டமே இந்த முயற்சியை வாழ்த்தவும், வளர்க்கவும் முன்வந்தது. இல்லையானால், புதிய வகை இலக்கியப் படைப்புகள். எல்லாம் த மி ழு க் குப் புற ம் பா ன ைவ என்றும்,