பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 338.

உபசாரத்தையும் பெறத்தான் வேண்டும்’ என்று: வேண்டிக்கொண்டார்கள். - - “.

அவர்களது விருப்பப்படி இவர் தம் துணைவியாருடன் இலங்கை சென்றார். இவர்களுடன் ஃபோட்டோக் கலைஞர் என். ராமகிருஷ்ணாவும், கரூர் அன்பர் கண்ணனும் சென்றனர். -

இவருடைய உடன்பிறவாத சகோதரர் திரு. சு. இரா சேந்திர குருக்கள் யாழ்ப்பாண நகரிலும், திரு. நடராசன் மட்டக்களப்பிலும், திருவாளர்கள் தனபாலசிங்கமும் சுந்தர லிங்கமும் கொழும்புவிலும், செய்திப் பொறுப்பாசிரியராக இருந்த திரு. நாகலிங்கம் கண்டியிலும் முன்நின்று இவருடைய மணிவிழவை நடத்தி வைத்ததுடன்: கி.வா.ஜ., மணிவிழா மலர் ஒன்றையும் வெளியிட்டனர். அந்தச் சமயத்தில் மதுரைப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்த பேரறிஞர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் குறிப்பிட்டார்கள்:* -

சில ஆண்டுகளுக்கு முன்னே அன்பர் கி.வா. ஜ. அவர் களுக்கு அவரது ஊரிலேயே ஒரு பாராட்டு விழா நடந்தது. ஏதோ என்னுடைய நல்ல காலம் அதில் தலைமை பூணும் வாய்ப்பினைப் பெற்றேன். அப்போதுதான் அவருடைய இளமையினைப்பற்றியெல்லாம் அ றி ய மு டி ந் த து. அங்குள்ள மலைமேலே வீற்றிருக்கும் முருகனிடத்திலே ஈடுபட்டுச் சில நாட்களில் இரவெல்லாம் ஆண்டவனோடு அவர் ம ன் றா டி நி ன் ற வரலாற்றினையெல்லாம் உணர்ந்தேன். அதன் பயனாகத் தமிழ்ப் பாடல்களை பேசுவது போலவே மிக விரைவாக இயற்றும் திறமை அவருக்கு இயல்பாகவே அமைந்துவிட்டதாம். -

“பின்னர், பழைய சங்க காலத் தமிழ்க் கருவூலத்தைத் தமிழ் நாட்டுக்கும் உலகத்துக்கும் தேடித் தந்த மகாமகோபாத்தியாய சாமிநாத ஐயரது தொடர்பு கிடைத்ததால், தமிழில் பேரறிவு படைக்கும் பெருமை

  • கலைமகள் மே, 1966.