பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔3* நாம் அறிந்த கி.வா.ஜ.

தாகத் தெரியவில்லை. பின்னால், காந்தமலை ஆண்டவன் தான் இந்த நிகழ்ச்சியைப் பலரும் அறியும்படியாகச் செய்தான். , - 60-ஆம் ஆண்டு கிறைவு : -

1966 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதியன்று இவருக்கு 60-ஆம் பிராயம் நிறைந்து 61-ஆம் ஆண்டில் இவர் அடியெடுத்து வைத்தார். இவருக்கு இதைப்பற்றிய எண்ணம் எழுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே, இவருடைய அன்பர்களான மாயாவி’யும், அகிலனும் இவரது வீட்டிற்கு வந்தார்கள். உங்களுக்கு அறுபதாம். ஆண்டு நிறைவு வருகிறது. அதை நாங்கள் கொண்டாடப் போகிறோம்’ என்ற போது, இவர், வேண்டாமே.” என்ற போதிலும் அவர்கள் அந்த முயற்சியைக் கைவிடு வதாக இல்லை. i இவருடைய குழந்தைகள் இவரது அறுபதாம் ஆண்டுக் கல்யாணத்தை மிகச் சிறப்பாக மயிலை நாராயணியம்மாள் கல்யாண மண்டபத்தில் நடத்தி வைத்தனர். * ..., சென்னை அன்பர்களுக்கும் முன்னதாகக் கல்கத்தா தமிழ் எழுத்தாளர் சங்கத்தார். இவரது மணி விழா'வை அங்கே கொண்டாடுவதில் முந்திக்கொண்டார்கள். அன்பர் ப.ந. தியாகராஜன் இந்த விழாவைக் கல்கத்தாவில் நடத்துவதில் முனைந்து நின்றார். - சென்னை அன்பர்கள் விழாக் குழு ஒன்றை அமைத் தார்கள், பொருட் செல்வரும், சமரச சன்மார்க்க அருட் செல்வருமாகிய தொழிலதிபர் நா. மகாலிங்கம் அவர் களைத் தலைவராகக் கொண்டு சிற்ந்த முயற்சியுடன் 1966 ஜூலை 10-ஆம் தேதியன்று. இவருடைய மணி விழாவை நடத்தினார்கள் கலைமகள் அதிபர் நா.ராமரத்தினத்தின் துணையுடன் வாழும் தமிழ்’ என்கிற மலரையும் வெளியிட்டார்கள். இந்த விழாவுக்கு இலங்கையிலிருந்து இவருடைய நண்பர்கள் சிலர் வந்திருந்தார்கள்: நீங்கள் உங்கள் துணைவியாருடன் இலங்கைக்கு வந்து எங்களது.