பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 3.36

பூரீமத் ஐயர் தம் அறைக்குள் சென்று உட்கார்ந்தார். அவருடைய சாமான்களை எல்லாம் இவர் அந்த அறையில் வைத்துவிட்டுப் தம் ஜாகைக்குப் போகக் கிளம்பினார்.

“கொஞ்சம் இருக்கவேண்டும்” என்றார் ஆரீமத் ஐயர். இவர் தயங்கியபடியே நின்றார். - -

புரீமத் ஐயர் தம் பெட்டியைத் திறந்தார். தமக்குப் போர்த்தப்பட்ட பொன்னாடையை எடுத்தார்.

என் நீண்ட நெடுநாளைய ஆசைகளை நீங்கள் அல்லவா பூர்த்தி செய்து வருகிறீர்கள்! உங்களுக்கல்லவா இந்தப் பொன்னாடையைப் போர்த்த வேண்டும்’ என்று சொல்விக்கொண்டே அந்தப் பொன்னாடையைத் தம் திருக்கரத்தால் இவருக்குப் போர்த்தினார். இவர்கள் இரண்டு பேர்களின் விழிகளிலும் கண்ணிர் துளித்தது* இவரையும், அவரையும் தவிர வேறு யாரும் அங்கே இல்லை. சுவரிலே இருந்த கடிகாரம் டங்” கென அசை மணிக்கு ஒருதரம் அடிக்கும் ஓசையை எழுப்பிற்று.

“நல்ல சகுனம் மணி அடிக்கிறது. மேலும் மேலும் நிறையப் பொன்னாடைகள் பெற வேண்டும்’ என ரீமத் ஐயர் தழுதழுத்த அன்புக் குரலில் இம் மாணவரை வாழ்த்தினார்.

இவருக்கு ஒரு கணம் உடம்பெல்லாம் புல்லரித்தது. பேச்சு எழவில்லை. பூரீமத் ஜயரது பாதத்தில் சாஷ்டாங்க மாக விழுந்து வணங்கினார். - - எழுந்திருத்கவேண்டும்” என மெல்லக் குனிந்து இவரைத் தொட்டு பூரீமத் ஐயர் எழுந்திருக்கச் செய்தார்: :வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள் இல்லையா? இந்தப் பூவையும் பழத்தையும் எடுத்துக்கொண்டுபோகவேண்டும்’ எனச் சொல்லி, அவற்றைக் கொடுத்து இவரை அனுப்பி வைத்தார். - ..., - --

இந்த நிகழ்ச்சி பலருக்கும் தெரியாது; இவரும் இதைப் பற்றி எவரிடமும் வெகு காலம் வரை சொல்லிக்கொண்ட