பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

335 நாம் அறிந்த கி.வா.ஜ. படிப்பவர்களுக்குச் ச லி ப் புத் தட்டாமல் ரசமாக இருக்கும்படி அமைந்தால்தான் அந்த முயற்சியும் பயனுடையதாக இருக்கும். -

இத்தகைய தகுதி வாய் ந் து கவிஞர்கோமான்டு பிள்ளையவர்களது சரித்திரம் அமைந்தது. தமிழ்ந” எங்கிலுமிருந்து ஐயரவர்களுக்குப் பாராட்டுகள் வந்து குவிந்தன.

தஞ்சையில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் தமிழ் வளர்ச்சிக்குச் சி ற ந் த பணியாற்றிக்கொண்டிருந்தது. திருவாளர் சீனிவாச பிள்ளை, உமாமகேசுவரம் பிள்ளை போன்றோர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 23-ஆம் ஆண்டு விழாவோடு ம கா வி த் து வா ன் பிள்ளையவர்களது பிறந்தநாள் விழாவையும் சேர்த்து, ஐயரவர்களை அவ்’ விழாக்களுக்குத் தலைமை தாங்க அழைத்தனர்.

பிள்ளையவர்களது விழா என்பதால் ஐயரவர்கன் இவரையும் அழைத்துக்கொண்டு தஞ்சை சென்றார். விழாக்கள் சிறப்பாக நான்கு நாட்கள் நடந்தன.

இதற்கு முன்னால் எழுதப்பெற்ற தமிழ்ப் புலவர் வரலாறுகளில் தெய்விக அம்சத்தை அதிக அளவு ஏற்றியே சொல்லி வ ந் தி ரு க் கி றார் கள். அப்புலவர்களுக்குப் பெருமை உண்டாக்க வேண்டும் என்பது ஒன்றனையே கருத்தாகக் கொண்டு எழுதப்பெற்றவை அவை. எனவே, முற்றும் அவற்றை நம்பும்படி இல்லை.

  • உள்ளது உள்ளபடியே அமைந்த பிள்ளையவர்களது சரித்திரமே தமிழில் முதல் வாழ்க்கை இலக்கியமாக மிளிர் கிறது. ஆசிரிர்பால் கொண்டிருந்த பெருமதிப்போடும், உள்ளன் போடும் தம் அன்னாரது சரித்திரத்தை ஐயரவர்கள் எழுதியிருப்பதே அதற்குக் காரணம்’ எனப் பலரும் இவருடைய ஆசானைப் பாராட்டினார்கள்.

விழாக்கள் முடிந்தபின் இவர்கள் ரெயிலேறி மறுநாள் காலை இருள் பிரிவதற்குள் சென்னை வந்து சேர்ந்தார்கள்.