பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 334

கண்டளப் போரில் இறங்க வேண்டாம்! அதனால் உங்கள் தமிழ்ப் பணிதான் தடைப்படும். நீங்கள் தமிழ்த் தொண்டு செய்துகொண்டே இருங்கள். தெய்வம் காப்பாற்றும்’ என்றார். அவர் சொற்படியே, இனி என்னை யார் எப்படித் துாற்றினாலும் பதில் எழுதுகிறதில்லை என அவருக்கு வாக்குறுதி கொடுத்தேன். பிறரைக் கண்டனம் செய்வதிலேயே சிலர் திருப்தி அடைகிறார்கள்!’ என்றார் ஐயரவர்கள், :

அன்பர் கி.வா.ஜ.அவர்களோ பதில் எதுவும் சொல்ல வில்லை. கொண்டுபோன பத்திரிகையை ஐயரவர்களிட மிருந்து திரும்ப வாங்கி வரக் கையை நீட்டினார். - .அதை ஐயரவர்கள் இவரிடம் திருப்பித் தரவில்லை ٤ے

அதைத் தூக்கி அப்பால் வைத்துக்கொண்டுவிட்டார்.

அதோடு, “இதை நீர் மறந்தே விடவேண்டும்: இந்தக் கட்டுரை ஆசிரியர் மிகவும் நல்லவராகக்கூட இருப்பார். யாரோ கொடுத்த தவறான தகவலை வைத்துக்கொண்டு எழுதியிருக்கலாம். கிடைத்த தகவல் சரியானதா என்பதை அவர் ஆராயாமல் எழுதியதுதான் பிழையாகிவிட்டது. பிழையை உணரும்போது வருந் தினாலும் வருந்துவார். இதனால் அவர்மீது உங்களுக்கு வெறுப்பு இருக்கக் கூடாது’ என்றார்.

ஆசான் சொன்னது அப்படியே உண்மையானதைச் சில காலம் கழிந்த பின்னர் இவரும் உணர்ந்தார்.

x X - X முழுமை பெற்ற மகாவித்துவானின் வரலாறும் பாராட்டும் : 1984-ஆம் ஆண்டு மகாவித்துவான் பிள்ளையவர்களது சரித்திரத்தின் 2-ஆம் பாகமும் வெளியாயிற்று. தம் ஆசிரியரது வரலாற்றை எழுதிவிட்ட முழு நிறைவு ஐயரவர்களுக்கு ஏற்பட்டது. - ... . . . ※ வாழ்க்கை வரலாறு என்பது வசன நூல்களில் முக்கிய மான அம்சம். உண்மையை உள்ளபடியே கூறவேண்டும்.