பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

333 நாம் அறிந்த கி.வா.ஜ.

பார்த்தபோது பல காலமாகக் கவனிக்கப்படாத இரண்டு பெட்டிகளில் ஏடுகள் இருந்தன. உள்ளே கையை விட்டால் ஒரே எலிப் புழுக்கை! எலிகளால் ஜீரணிக்க முடியாத சுவடித் துண்டுகளே தூள்தூளாக இருந்தன. எல்லா வற்றையும் கீழே கொட்டித் தட்டிப் பார்த்தபோது அரையும் குறையுமாக இருந்த சிந்தாமணி ஏடு ஒன்று

கிடைத்தது. அந்த ஒன்றை மாத்திரம் அந்த வீட்டில்

இருந்தவர்களிடம் காட்டி, சொல்லிவிட்டு எடுத்து வந்தேன். எல்லாவற்றையும் எடுத்துவர வேறு எதுவும் இல்லை; எலிப்புழுக்கைகள்தாம் இருந்தன. இப்படிப் - பழைய தமிழ்ச் சுவடிகளைத் தேடி அலைந்த காரணத் தினால், தெரிந்தோ தெரியாமலோ என்மீது சுமத்தப் பட்ட அபவாதங்கள் எத்தனையோ? மிகவும் சிரமப்பட்டுச் *சிந்தாமணி"யை நான் பதிப்பித்தவுடன் பலரும் பாராட்டினார்கள். பிறரைக் கண்டிப்பதிலேயே இன்பம் காணும் சிலர், பல வகையான பிழ்ைகள் அதில் மலிந்துள்ள தாகக் கண்டனப் பத்திரிகையே அச்சிட்டு விநியோகித் தார்கள்! நூற்பதிப்பு விஷயத்தில், எடுத்த எடுப்பிலேயே முற்றத் திருத்திய பதிப்பை வெளியிடுவது சாத்தியமா? பிழையல்லாதனவற்றையும் பிழைகளாக அதில் கூரி யிருந்தது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது, ஒரு நாள் இரவெல்லாம் உட்கார்ந்து அதற்குப் பதில் எழுதினேன். காலையில் என் நண்பர் சாது சேவுையரிடம் கொண்டு போய் அதைக் காட்டினேன். அவர் நான் எழுதியிருந்ததை வாங்கி முழுக்கப் படித்துப் பார்த்தார். உடனே அதைச் சுக்குச்சுக்காகக் கிழித்து எறிந்தார். அப்போது அவர் எனக்குச் சொன்ன புத்திமதி என்ன தெரியுமா? யார் என்ன வேண்டுமானாலும் உம்மைப்பற்றி அவதுாறாக எழுதிப் பேசிக்கொண்டிருக்கட்டும். அவற்றையெல்லாம் பொருட்படுத்தக் கூடாது. இவைபோன்ற கண்டனங்கள் இன்று தோன்றும்; நாளைக்குப் போய்விடும். இவற்றுக் கெல்லாம் சமாதானம் கூறிக்கொண்டு நீங்கள் இந்தக்