பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 岛岛念,

“இதற்கு நீ எப்படிப் பொறுப்பாவாய்? நான்தான் உனக்கு முதல் மார்க் கொடுக்க வேண்டுமென்று சிபார்சு சய்து, உனக்கு ஆயிரம் ரூபாயைக் கொடுக்கச் செய்ததாக என்மீதுதானே இந்தக் குற்றச்சாட்டு?’ என ஐயரவர்கள் கிசான்னபோது இவர் விசிக்க ஆரம்பித்துவிட்டார். -

‘நீ ஒன்றும் வருத்தப்படதே! இதுபோன்ற அபவாதங் களுக்கு உள்ளாவது எனக்கு ஒன்றும் புது அநுபவம் இல்லை. ஒரு முறை விக்கிரமசிங்கபுரம் போயிருந்தபோது அவ்வூர்ப் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவரைச் சந்தித்தேன். “நீங்கள் எந்த ஊர்?’ என்று கேட்டேன். கடையநல்லுனர்’ என்றார். உங்களுடைய வீட்டில் தமிழ் இலக்கியச் சுவடிகள் இருக்கின்றனவா?’ என்று கேட்டேன். நிறைய இருந்தன. ஒருவர் வந்து எல்லாவற்றையும் துக்கிக் கொண்டு போய்விட்டார்” என்றார். யார் வந்து தூக்கிக்கொண்டு போனது?” என்று விசாரித்தேன். கும்பகோணம் சாமிநாதையர் வந்து தாக்கிக்கொண்டு போய்விட்டார் என்றார். . . .

என்க்குப் பகீரென்றது. என்னுடன் சிலபேர் இருந் தார்கள். அந்த வாத்தியார் என்னை அறிந்துகொள்ள வில்லை என அறிந்தேன். நான் இங்கே இல்லை, விடு. முறைக்கு ஊர் போயிருந்தேன். அப்போது, வீட்டில் இருந்த வர்கள் சொன்னார்கள்; வந்தவர்தாம் எல்லாவற்றையும் எடுத்துச் சுருட்டிக் கொண்டு போய்விட்டார் என்றார்.

அப்போது என்கூட இருந்தவர்களிடம் நான் நடந்த விஷயத்தைச் சொன்னேன். இவர் என்னை இன்னார். என்று தெரிந்துகொள்ளாமல் வீணாக அபவாதம் சுமத்தி யிருக்கிறார். ஒரு முறை நான் கடையநல்லூர் போனது உண்டு. ஒரு வித்துவான் வீடு இங்கே உண்டு என்று தெரிந்து, ஒரு நண்பருடன் அங்கே போய் விசாரித்தேன். அதுதான் இவர் வீடுபோலும்! ஏடுகள் மச்சில் இருக்கின்றன என்று. அந்த வீட்டில் இருந்தவர்கள் சொன்னார்கள். ஏறிப்