பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3忍置 நாம் அறிந்த கி.வா.ஜ.

அவதுணறுகளை உறுதியுடன் தாங்கும் ஆசான் :

தமிழன்பர் மகர்நாட்டின் தொடர்ச்சிபோல ஒரு பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளிவந்தது. -

இவர் பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றிக் கோண்டிருந்ததால் பெரும்பாலும் எல்லாப் பத்திரிகை களையும் ஒரு முறை புரட்டிப் பார்ப்பது வழக்கம். அப்படிப் பார்க்கும்போது அந்தக் கட்டுரை இவருடைய கண்ணில் பட்டுவிட்டது. உடனே அதைப் படித்துப் பார்த்தார். அதில் இவருக்கு ஆயிரம் ரூபாய் பரிசு கிடைத்ததுபற்றி அவதூறாக எழுதப்பட்டிருந்தது.

அப்போது இவர் அடைந்த வேதனை சொல்லி முடியாது. இவரால் தம் உணர்ச்சியை அடக்க முடியவில்லை. கட்டுரையைக் கொண்டுபோய்த் தம் ஆசிரியரிடம் காட்டினார். . -

ஐயரவர்கள் அதை மெதுவாகப் படித்துப் பார்த்தார். அவருடைய முகத்தில் எந்தவிதமான மாறுதலையும் இவர் காணவில்லை. : . .

இவர் வித்துவான் தேர்வு எழுதிய ஆண்டு இவர்ோடு தேர்வு எழுதியவர் ஒரு வ ைர யு ம் இவரையும் இணைத்து, அவர் ஆயிரம் ரூபாய்க்காக ஏங்கி இருக்க வில்லை. சாதி உணர்வின்றித் தகுதி அடிப்படையில் வழங்கி இருந்தால் அந்தப் பரிசு அவருக்குத்தான் கிடைத்திருக்க வேண்டும்’ என்பதாக எழுதப்பட்டிருந்த கட்டுரைப் பகுதிதான அது.

இவரது முகத்தில் காணப்பட்ட வேதனைக் குறியைக் கண்டு, இதில் என்னைப்பற்றித்தானே குறை கூறியிருக் கிறார்கள்? சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும்! நீ ஏன் வருந்துகிறாய்?’ என்றார் ஐயரவர்கள்.

“இவ்விடத்துப் பெயருக்கு என்னால் அல்லவா இந்தக் களங்கம் உண்டாகிவிட்டது?’ எனச் சொல்லும்போது இவர் அழுதுவிட்டார்.