பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 330

எனவே அவனும் அவனுடைய தங்கையும் தாயாரும் அவரது வீட்டிலேயே இருந்து வந்தார்கள். அந்தக் கொள்ளுப் பேரணிடம் ஐயரவர்களுக்கு மிக்க அன்பு உண்டு. - -

அவன் லயோலா கல்லூரியில் சேர்ந்து படிக்க விண்ணப் பிதிருந்த்தபோது இவருக்கு மிகவும் வேண்டிய சத்குணம் என்பவர் அங்கே இருந்தார். அவரிடம் அவனுக்காகக் கொஞ்சம் சிபார்சு செய்யும்படி வீட்டில் உள்ளவர்கள் சொன்னார்கள். தகப்பனார் இல்லாத பிள்ளை தானே. கொஞ்சம் சிபார்சு செய்திருக்கக் கூடாதா? அவரால் அது முடியாத காரியம்: பிறரிடம் போய் எதையும் கேட்க அவர் கூசுவார். தம்முடைய கடைசிக் காலத்தில் அவருக்கு இருந்த ஆசையெல்லாம், தம் ஆசிரியரான பிள்ளையவர் களைப் போல் தம் இறுதி மூச்சு உள்ள வரை யாருக்காவது தமிழ்ப் பாடம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும், முடிந்த அளவு அரிய பழைய தமிழ் நூல்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதாகத்தான் இருந்து வந்தது.

கல்லூரிகள் எல்லாம் வந்த பிறகு தனித் தமிழை மட்டும் எடுத்துப் படிக்க யார் முன்வருகிறார்கள்: தெய்வ அருள்போல, தமிழார்வமும், கவிபாடும் திறனும் ஒருங்கே பெற்ற இவர் ஐயரது லட்சியத்திற்கு உதவியாக வந்தார். இவரிடம் அ வ ரு க் கு அலாதியான அன்பு இருந்தது.

இவர் போன்றோர்க்குத் தமிழ்ப் பாடம் சொல்வ திலும், இவர்களை வைத்துக்கொண்டு தமிழ் நூல்களை ஆராய்வதிலும், சதாசிவநாம ஜபத்திலுமே அந்தத் தமிழ்

முனிவரின் எஞ்சிய வாழ்வு மணந்துகொண்டிருந்தது.

X x - X: