பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 29 நாம் அறிந்த கி.வா.ஜ.

அன்றுமுதல் இவர் தாற்பதாண்டுக் காலத்திற்கும் மேலாக, பழமொழிகளுடன் நாடோடி இலக்கியங் களையும் தொகுத்திருக்கும் சாதனை தம் ஆசிரியப் பிரானின் வாக்கைச் செயல்படுத்த இவர் மேற்கொண்ட

பெருந்தவமேயாகும். -

X - X X:

ஐயரவர்கள் தமிழ் விடு தூது” நூலைப் பதிப்பிக்கும் போது ஒரு நாள் இவர் அதனைப் படித்து வந்தார். அதில் காசு பணம் காணில் உன்னை விற்பார்; அவர்பால் நீ மேவாதே என ஒரடி வருகிறது. அந்த இடத்தை இவர் பிடித்தபோது ஐயரவர்கள், ஐயோ’ என்று பதறிப் போனார். இரண்டு மூன்று பெருமூச்சு விட்டார்.

“இந்தக் காலம் பணத்தால் அல்லவா எண்ணப்படு கிறது! என்னுடைய நோக்கம் காசு பணம் அல்ல என்பதைப் பிரமாணமாகச் சொல்வேன், அழிந்து போகும் நிலைமையிலுள்ள நம் பழந்தமிழ் இலக்கியங் களைக் காப்பாற்ற வேண்டுமென்றே என் நெஞ்சம் சதா காலமும் துடித்துக்கொண்டிருக்கிறது. நான் என்ன செய்வேன்? மிகவும் சிரம ப்ப ட் டு ஒரு நூலை அச்சிட்டாலும் அது விற்பனையாக முப்பது வருஷங்கள் ஆகின்றனவே! பிறரிடம் சென்று ஒன்று கேட்க மனம் கூக கின்றதே” என வருந்தினார்கள்.?

தமக்காக, தமக்கு வேண்டியவர்களுக்காக என்று யாரிடமும் போய் எதையும் கேட்கும் மனோபாவம் ஐயரவர்களிடம் இருந்ததில்லை.

பூரீமத் ஐயரது வீட்டிலேயே அவர் பேத்தியின் வயிற்றுக் கொள்ளுப்பேரன் ஒருவன் வளர்ந்து வந்தான். சிறு வயதிலேயே அவனுடைய தகப்பனார் காலமாகிவிட்டார்,

1. தமிழ்ப் பழமொழிகள் (11586) கி.வா.ஜ. 2. அன்பர் கி.வா.ஜ., ச. கு. கணபதி ஐயருக்கு

எழுதிய கடிதம்.

தா.--21 -