பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 328

வாய்ந்த தமிழின் சிறப்புப் பேசப்பட்டது. மகாகவி பாரதி

யின் படைப்புகளாலும், ஐயரவர்களின் பதிப்புகளாலும் தமிழணங்கு பழம்பெருமையும், புதுச் சிறப்பும் ஒருங்கே சேரப் பொலிவுற்றாள். பிற மொழி மோகம் கொண்ட தமிழர்களுங்கடத் தமிழ் மொழியின்பால் மதிப்பும் பற்றும் கொள்ளத் தொடங்கினார்கள். சாதி, சமய, சமூக வேறுபாடுகளுக்கிடையே பலதரப்பட்ட கொள்கையுடைய வர்களும் தமிழ் அன்பர் மகாநாட்டுக்கு வந்து தங்கள் கருத்தை வெளியிட்டார்கள். அந்த மகாநாட்டின், வரவேற்புக் குழுத் தலைவராக ஐயரவர்களை வைத்துக் கொண்டு பலரும் செயல்பட்டார்கள். இதனை ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் திறந்து வைத்தார். மகா நாட்டுக்குக் கனம் திவான் பகதூர் குமாரசாமி ரெட்டியார் தலைமை தாங்கினார். தமிழன்பர் மகாநாடு முதல் நாள் வ்ெகு சிறப்பாக நடந்தது என்றாலும், மறு நாள் அரசியல் புகுந்துவிட்டதால் மகாநாடு குழப்பத்தில் முடிந்தது. இதனால் அம்மகாநாட்டில் கலந்துகொண்ட பலரும் ஊக்கம் இ ழ ந் த ன ர். மகாநாட்டின் முடிவுகளைத் தொடர்ந்து செயல்படுத்துவதில் உற்சாகம் காட்ட வில்லை. - . . . . . . . .

அந்த மகாநாட்டிலேதான் ஐயரவர்கள், கறை யானுக்கு இரையாகிக்கொண்டிருந்த ஏடுகளில் எழுதப் பட்டிருந்த பழந்தமிழ் இலக்கியச் செல்வங்களில் ஒரு சில வற்றையே என்னால் பாதுகாக்க முடிந்தது. இன்னமும் எ ழு, த ப் பெற ா ம ல் வா ய் மொ ழி யா க வே நாடோடி இலக்கியப் பகுதிகளாகிய பாடல்கள், கதைகள், விடுகதைகள், பழமொழிகள் ஆகியவை ஆங்காங்கே வழங்கி வருகின்றன. இவற்றையெல்லாம் பல இடங் களுக்கும் சென்று சேகரித்துப் பதிப்பிக்கும் பணியை உடனே திட்டமிட்டுத் தொடங்கியாக வேண்டும். இல்லை யென்றால் அந்தச் செல்வங்களும் நாளடையில் மறைந்தே போகும்’ என மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டார்.