பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s27 . . நாம் அறிந்த கி.வா.ஜ.

அந்தப் பாடல்களைத் தம் விளக்கத்தோடு சேர்த்துப் பல கட்டுரைகள் எழுதிச் ‘சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் வெளிவரச் செய்தார். வானொலியில் பலமுறை நாடோடி இலக்கியம்பற்றிப் பேசியுள்ளார். அவற்றைத்தொகுத்துப் பல நூல்களாகவும் வெளியிட்டுள்ளார். . - தாம் அரும்பாடுபட்டுத் தொகுத்து வைத்திருந்த 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமொழிகளை எந்த எந்த முறைகளில் ஆராய்ச்சி செய்து ஆராய்ச்சிக் குறிப்போடு அதனை வெளியிட வேண்டும் என்று நினைத்தாரோ அது முடியவில்லை. அவற்றைத் தம் இறுதிக் காலத்தில் அவசரம் அவசரமாக அகர வரிசைப்படுத்தி, எண்ணிட்டு ஒரு நூலாகப் பதிப்பிக்கத்தான் இவரால் முடித்தது.

இந்நூல் பன்முக ஆய்வுக்குத் துணை செய்யும். ஆய்வாளர்களுக்கும், அறிஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பழமொழிபோல் எ டு த் துக் காட்டப் பயன்படும் என்பது உறுதி’ என்பதாகத் தக்க சான்றுகளுடன், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரும், ஆராய்ச்சிப் பேரறிஞருமான டாக்டர்

தமிழண்ணல் எழுதினார். கி.வா.ஜ.வின் கடைசி நூல்

என 20.5.89-இல் வெளியான தமிழண்ணலின் மதிப் புரையைப் பாராட்டிப் பேராசிரியர் அ. சாம்பசிவம் முதலியோர் எழுதிய கடிதங்கள் 18-6-89 தினமணி'யில் வெளியாயின. . - -

இத்துணைப்புகழையும் இவருக்குத் தேடிக் கொடுத்த இந்தப் பணியை இவர் மேற்கொண்டது எதனால் தெரியுமா? - * - - 1933-ஆம் ஆண்டு டிசம்பர் 23, 24-ஆம் தேதிகளில் தமிழ் அன்பர் மகாநாடு ஒன்று சென்னைப் பச்சையப்ப

முதலியார் கல்லூரியில் நடைபெற்றது. ஆந்திரம்,

கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய அனைத்து மொழி வினரையும் தழுவிய சென்னை மாநிலத்தின் தலைநகராக இருந்த சென்னையில் அப்போது எங்கும் தொன்மை