பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 326

களும் செய்து காட்டினார். இந்தப் பாட்டுக்கு ராகம் கேதாரகவுளம்; எழுதிக்கொள்ளுங்கள்” என இவரைப் பார்த்துச் சொன்னார். - -

  • அடி சக்கேன்னா! இவருக்குங்கூட நீ வாத்தியாரா .யிட்டயா?” எனக் கூட இருந்தவர்கள் படையாச்சியைக் கேலி செய்தார்கள். அதுவும் ஒரு வகையில் உண்மை தானே!

அன்று இரவு மணி இரண்டு ஆனது கூடத் தெரியவில்லை. பாவட்டஞ் சோலைக்குள்ளே நீலமயில் .

வாய்விட்டுக் கூவுதையா-முருகா வாய்விட்டுக் கூவுதையா !” என்ற அவரது பாடலின் குரல் தாதத்திலே இவர் தாம்

தம்மையே இழந்திருந்தாரே! - ...

X 、 - X . . . .” - X இப்படி ஒராண்டு ஈராண்டல்ல, நாற்பது ஆண்டு. களுக்கும் மேலாக நாடோடிப் பாடல்களையும் பழமொழி களையும் இவர் சேகரித்திருக்கிறார். * . .

வெளியில் போய்விட்டு விட்டுக்குள் வந்தவுடன் முதல் வேலையாகத் தம் சட்டைப் பையில் சிறு சிறு தாள்களில் எழுதிச் சேகரித்து வந்த நாடோடி இலக்கியத்தை அவற்றுக்கென வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதி விட்டே மற்றக் காரியங்களில் ஈடுபடுவார்.

இவருக்கு இந்த நாடோடி இலக்கியத்தில் இத்துணைப் பற்று இருப்பதைக் கண்ட இவருடைய அன்பர்கள் சிலரும் இவருக்காக அ வ ற் றை த் தா மே சே க ரித்து ம்

உதவியுள்ளார்கள்.” -

நாடோடி இலக்கியத்தின் சுவையைத் தமிழன்பர்கள் எல்லோரும் சுவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவர்

  • ஒருசாண் வவி-கி.வா.ஜ.