பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.25 - நாம் அறிந்த கி.வா.ஜ.

என்றாரே தவிர, சினிமா, டிராமா, அவற்றின் பாடல் எதுவுமே பிடிக்காது என்பதில்லை, சினிமா, நாடகம் பார்க்க, முதலாவதாக இவருக்கு நேரம் இருந்ததேயில்லை. சினிமாவைக் காட்டிலும் இலக்கியத்தைப் படிப்பதிலே இவருக்கு மகிழ்ச்சி மிகுதியாக இருந்தது. ஜெமினி வாசன் அவர்களே இவரை அழைத்துப் போய்க் காட்டிய ஒளவையார்’, ‘அபூர்வ சகோதரர்கள் படங்களைக் பார்த். திருக்கிறார்; தேவர் டைரக்ட் செய்த படங்களையும் பார்த்திருக்கிறார். மைய அரசின் படத் தணிக்கைக் குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இதனால் சென்னை, பம்பாயிலுள்ள பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுடன் பேசிப் பழகும் வாய்ப்பும் இவருக்கு இருந்திருக்கிறது. புதுக்கோட்டையில் சாந்தானந்த சுவாமிகள் என்கிற, பெரியார் இருக்கிறார். அவருக்கு மிகவும் வேண்டியவர் பட இயக்குநர் ஜி. என். வேலுமணி. சேந்தமங்கலம் சுவாமிகள் இவருக்கும் மிகவும் வேண்டியவராயிற்றே! இந்தத் தொடர் பி னா ல் ஜி. என். வேலுமணியின் “சரவணா ஃபிலிம்ஸ்’ படங்களான நம்மவீட்டுத்தெய்வம்,’ அன்னை அபிராமி ஆகிய இரண்டு திரைப் படங் களுக்கும் இவர் சில பாடல்கள் எழுதியிருக்கிறார்.

சரவணா ஃபிலிம்ஸ் - நெங்கம்பாக்கம் ஜி. பி. கணேசையர். தான் இவரை வந்து வந்து அழைத்துப் போவார். குன்னக்குடி வைத்தியநாதன் தத்தகாரம் சொல்ல, அம்பிகையைப்பற்றி அப்படங்களுக்கு இவர் பாடல்கள் எழுதியிருக்கிறார். * .

அன்று சாமிநாத படையாச்சி இவரது விருப்பப்படியே முளைப் பாட்டு, கப்பல் பாட்டு, குறவஞ்சி, ஏற்றப் பாட்டு என ஒவ்வொன்றாகத் தம் சரக்கை அவிழ்த்துவிட்டார். அன்று அவற்றையெல்லாம் இவர் எழுதிக்கொண்டார். இரவு நேரம் போன்தே தெரியவில்லை. · ४

சாமிநாத படையாச்சி கூத்து வாத்தியாராகவும் இருப்பவர். எனவே, பாடல்களுக்குத் தாமே அபிநயகி