பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

వీ48 நாம் அறிந்த கி.வா.ஜ.

பொன்னாடை போர்த்திக் கவுரவிக்க வேண்டுமென்ற எண்ணம் சிலருக்கு உண்டாயிற்று. - - பூரீல பூரீ வட கு ம ைர அ ப் பண் ண சுவாமிகள் இம்முயற்சிக்குப் பின்னணியில் இருந்தார். அப்பண்ண சுவாமிகளின் வாக்கையே வேதமாக மதிக்கும் பாலப்பட்டி ஜமீன்தாரிணி செளந்தரா கைலாசம் அம்மையார் இந்த ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார்.

விழாவுக்கு. சிலம்புச் செல்வர் டாக்டர் ம. பொ. சிவ ஞானம் தலைமை வகிப்பதாக இருந்தது. தமிழக ஆந்திர எல்லை குறித்து முடிவு செய்ய மைய அரசால் நியமிக்கப் பட்ட படாஸ்கர் குழு"வின் முன் அந்தத் தேதியில் அவர் சாட்சி சொல்ல வேண்டியிருந்ததால் அவரால் வர இயலாத நிலை ஏற்பட்டது. - -

கடைசி நேரத்தில் செளந்தரா கைலாசம் அம்மையார், தொலைபேசிமூலம் பேரறிஞர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களைச் சந்தித்து அந்த விழாவுக்குத் தலைமை தாங்க அழைத்தார். அவரும் உடனே இவரது ஊராகிய மோகனூருக்கு வந்தார். காவேரி சென்று நீராடினார். காந்தமலைக்குச் சென்று தண்டபாணிக்கு அன்று நடைபெற்ற அபிஷேக ஆராதனைகளைக் கண்டு களித்தார். - . . . - -

இவர்கள் அனைவரையும் செளந்தரா அம்மாள் பிற்பகல் விருந்துக்குத் தம் பாலப்பட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்றார்; திரும்ப மாலையில் மோகனூர் கொண்டு வந்தார். - - - -

கன்யகாபரமேசுவரி மடத்திலிருந்து இவர்கள் அனை வரும் அருணகிரிநாதர் அறச்சாலைக் கட்டிடத்திற்கு ஊர் வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். விழாவுக்கு, தெ. பொ. மீ., அவர்கள் தலைமையேற்று இவருக்குப் பொன்னாடை போர்த்திப் பேசினார். கி.வா.ஜ.வின் புலமையை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இங்கே வந்த பிறகுதான் உண்மை முழுவதையும் உணர்கிறேன்.