பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. ഷt് இல்லத்தில் - 344

இங்கே பக்தர்கள் எல்லாம் அவரிடம் வைத்திருக்கும் மதிப்பைக் கண்டு ஆச்சரியப்படுகிறேன். பெரும்பாலும் உள்ளுரில் பலருக்கு மதிப்பு இருப்பது அரிது. ஆனால், இவரோ அதைப் பெற்றிருக்கிறார். அதற்கு இவருடைய நற் பண்புகளே பூரீமத் ஐயரிடம் சென்று கல்வி பயில்வதற்கு முன்னாலே இவர் செய்யுள் இயற்றுவார் என்று அன்பர்கள் சொல்ல அறிந்தேன்’ என்பதாகப் பேசினார். . . . - பின்னர், செள ந் த ரா அம் மா ள், வே. சிவசுப்பிர மணியன், ராமராஜன், ராஜாராம், அடியேன், தமிழ்மணி முதலிய பலரும் பேசினோம். முருகனாகவே பலருக்கும் காட்சி தந்துகொண்டிருந்த மகானான பூர் அப்பண்ண சுவாமிகள் மந்தகாசப் புன்னகையுடன் அன்று மேடையில் அமர்ந்திருந்தார். o, - - - இவர் நன்றியுரை கூறும்போது, இன்று காலண்டரைப் பார்த்தேன்; தருமிக்கு மீனாட்சிசுந்தரேசர் பொற்கிழி கோடுத்த நாள் என்று இருந்தது. இன்று எனக்கு மீனாட்சி சுந்தரனாரே .ெ பா ன் னா ைட போர்த்தினார்கள். என்றதுடன் ரீமத் ஐயர் முன் ஒரு நாள் அவருடைய இல்லத்தில் யாரும் இல்லாத சமயம் தமக்குப் பொன்னாடை போர்த்திய நிகழ்ச்சியையும் யாவரும் மெய்சிலிர்த்திடும் படி தெரிவித்தார். . .

வித்துவான் தேர்வில் முதலாக வந்த பின்பும் படிப்பில் இவருக்கு இருந்த ஆர்வம் அடங்கவில்லை. சென்னைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவராகச் சேரவேண்டும். ரீமத் ஐயரையே தமக்கு வழிகாட்டும் பேராசிரியராகக் கொள்ள வேண்டும் என இவர் விரும்பினார். அதற்கு விண்ணப்பமும் செய்தார். . ~ - - -

1934-ஆம் ஆண்டு மே மாதக் கடைசியில் பனசைக் குரு பூஜைக்கு ரீமத் ஐயர் சென்றபோது இவரும், அன்பர் வி.மு.க.வும் உடன் சென்றார்கள். இவர் தம் மனைவிய்ை அழைத்துக்கொண்டு சென்றார்: கும்பகோணத்தில்