பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

345 - . நாம் அறிந்த கி.வா.ஜ. மாமனார் வீட்டில் அவளை விட்டுவிட்டு உடனே பனசை சென்றார். r

குருபூஜை ஆனவுடன் இவர்மட்டும் தனியே கும்ப கோணம் வந்து, தம் மனைவியை அழைத்துக்கொண்டு மோகனூர் சென்றுவிட்டார். காந்தமலை அடிவாரத்தில் அருணகிரிநாதர் ஜயந்தி விழா நடைபெற்றது. காந்த மலைக் கோவிலிலும் மயூரபவனம் கோவிலிலும் முருகனுக்கு அபிஷேகம் செய்வித்தார். -

சேந்தமங்கலம் சுவாமிகளையும், அவருடைய சீடர் களான நிஜானந்தர், சங்கரானந்தர் ஆகியோரையும் தரிசித்து வரச் சேந்தமங்கலம் சென்றார். . திருமணமாகி ஜாகை வைத்த பின்பும் இவர் ஞானபண்டிதனையும், ஞானிகளையும் தேடியோடும் நாட்டம் தனியப் பெறாதவராக இருந்தது பூரீமத் ஐயருக்கு வியப்பை அளித்தது. . . У . இவர் மோகனூர் சென்றிருந்தபோது ரீமத் ஜயர் இவருக்கு எழுதிய இரண்டு கடிதங்களுள் ஒன்றில் ரீமத் ஐயர் இவருக்கு, அகத்தே நோக்குவதுபோல் புறத்தே நோக்கிக்கொண்டிருக்க வேண்டுமென்பது எனது கருத்து” என உலகியலை மென்மையாக எடுத்துரைக்கிறார். -

இவர் 22.8-34-இல் சென்னை திரும்பினார். கலை மகள் பத்திரிகை தோன்றுவதற்குக் காரணமாகவும், அதன் ஆசிரியராகவும் இருந்த டி. எஸ். ராமசந்திரையர் 23-7-34-இல் காலமானார். பத்திரிகை தோன்றியதி விருந்து - சர்க்குல்ேஷன் அதிகரிக்காமல் - பாலாரிஷ்டம் என்பார்களே அதிலிருந்து மீள முடியாத நிலையில் தவித்துக்கொண்டிருந்தபோது அவரது ம ைற வு பதிப்பாளருக்கு ஒரு பேரிழப்பாகத் தோற்றியது.

நாடி வைத்தியர்’ என்ற ஒரு கதையை அந்த ஆண்டு ஆடி மாத இதழில் எழுதியிருந்தார், அமரரான ராமசந்திரையர். அப்போது, அடுத்த மாதம் என்ன எழுதப் போகிறீர்கள்?’ என்று இவர் கேட்டிருக்கிறார். தா-22