பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 346

“அழுகையைப்பற்றி எழுதப் போகிறேன். எல்லாம் அழுகையில் தானே முடிகின்றன? எல்லா ரசங்களுக்கும் அதுவே பிரதானம். சிருங்காரத்தில்கூட விப்ரலம்ப சிருங்காரத்தையே - சோகச் சுவையைத்தான் - உயர்வாகக் கருதுகிறார்கள், இல்லையா?’ எனச் சிரித்துக்கொண்டே சொன்னாராம் அவர். வருவதை யாரால்தான் முன்கூட்டி

அறிய முடிகிறது? - •

கி.வா.ஜ.வோ பெரும்பகுதி நேரம் ஆசானுடனிருந்து வந்தார். முழுநேரமாக இப்பொறுப்பை இவரால் ஏற்க முடியுமா என்கிற மலைப்புக் காரணமாகவோ என்னவோ நாராயணசாமி ஐயர் இவரை அதுபற்றிக் கேட்கவில்லை போலும்! இவராவது அவரிடம் போய் அந்தப் பதவியை தமக்குக் கொடுக்கும்படி கேட்டிருக்கலாம். இவரும் கேட்கவில்லை. - - ஒரு சமயம், கலைமகளில் கொடுக்கும் சம்பளத்தைப் போல இரண்டு பங்கு சம்பளம் கெர்டுக்கிறோம்; இங்கு வந்துவிடுங்கள்’ எனத் தினமணி'யிலிருந்து இவருக்கு அழைப்பு வந்தது. முழுநேர ஊழியராக வேறு ஒரு நிறுவனத்தில் சேருவதால் ரீமத் ஐயரிடம் தாம் செய்து கொண்டிருக்கும் பணி க்கு இடையூறு ஏற்படும் என்பதால் அவ்வழைப்பை இவர் மறுத்திருக்கிறார். -

முழுநேர ஆசிரியர் ஒருவர் தேவைப்பட்டதால் நாராயணசாமி ஜயர் மற்ற நிர்வாக உறுப்பினர்களையும் கலந்து பேசினார். அவருடைய நெருங்கிய உறவினராகிய திரு. கி. சந்திரசேகரன் ஹரிஜன் சாஸ்திரி எனப் பெயர் பெற்ற ஆர். வி. சாஸ்திரியிடம் அ ந் த ப் பொறுப்பை ஒப்படைக்கலாம் எனக் கல்கி சொல்வதாக நாராயண சாமி ஐயரை வற்புறுத்தியதோடு, சாஸ்திரியை அவரிடம் அழைத்தும் வந்துவிட்டார். -

ஆர். வி. சாஸ்திரி கலைமகள் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதுபற்றியும் இவருக்கு வருத்தம்

ஏற்படவில்லை,

蠶 x x