பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

349 - . நான் அறிந்த கி.வா.ஜ.

வழியில், நான் சோழநாட்டுக்கும், பாண்டி நாட் டுக்கும் சென்று ஏடுகளைத் தேடியிருக்கிறேன். திருநெல் வேலி மாவட்டக் கவிராயர்கள் வீட்டில் நான் கண்ட சுவடிகள் திருத்தமாக இருந்தன. கொங்கு நாட்டிற்கு வந்து நான் ஏடு தேடினதில்லை. தன்னுல் இந்தப் பக்கத்தில் உண்டானதுதான். பெருங்கதை முழுமையும் கிடைக்கவில்லை. கொங்கு நாட்டிலே தோன்றிய அதன் ஏடுகள் இந்தப் புலவர் வீட்டில் எங்காவது ஒளிந்து கோண்டும் இருக்கலாம். பதிற்றுப்பத்'தின் முதல் பத்தும் கடைசிப் பத்தும் கிடைக்கவில்லை. சேரநாடும், கொங்கு நாடும் அடுத்தடுத்து உள்ளவை. ஆகையால், சேர வேந்தர்களைப்பற்றிய அந்த நூல்கூட இங்கே கிடைக்க லாம். வளையாபதி இங்கு இருக்கிறது என எனக்கு யாருமே சொல்லவில்லையே! என ஐயரவர்கள் இவரிடம் சொல்லிக்கொண்டே போனார்; ஒரு கணங்கூடக் காரில் நன்றாகச் சாய்ந்துகொண்டு சும்மா உட்காரவில்லை. நடுவில், நேரே அந்தப் புலவர் வீட்டுக்கே போகிறீர் கனா?’ என்று பட்டக்காரரின் தம்பியைக் கேட்டார். -

‘இல்லை.அந்த வீடு எனக்குத் தெரியாது. அந்த ஊரில் எங்களுக்குத் தெரிந்த ஒருவர் வீட்டுக்குப் போய்

விசாரித்துக்கொண்டு போகவேண்டும்.’

“அந்த அன்பர் ஊரில் தானே இருப்பார்?”

- **ஆம்.” - - - -

ஐயரவர்களின் ஆதுரத்தைக் கண்ட பட்டக்காரரின் z தம்பி, காரை மிக வேகமாக விடச் செய்தார். வண்டி அந்த ஊருக்குள் புகுந்தது. அவருக்கு வேண்டியவரும், ! நல்ல வேளை, வீட்டில் இருந்தார். எல்லோரும் புலவரின் விட்டுக்குப் போனார்கள்

புலவரின் மகன் அந்த ஊரில் சிறிய திண்ணைப் பள்ளிக்கூடம் வைத்திருந்தார். இவர்களையெல்லாம். கண்டவுடன் அவருக்கு ஒரே திகைப்பாகிவிட்டது. x