பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 35ው

உள்ளுர்க்காரர் அவரைப் பாரித்து, உங்கள் அப்பன் வளையாபதி வைத்திருந்தானாமே, இருக்கிறதா?” என்று கேட்டார். - -

ஏதோ ஒரு புத்தகம் அச்சுப் போட்டார். அதன் ஒரு பிரதியை நான் வைத்திருந்தேன். தேடிப் பார்க்கிறேன்’ என்று புலவருடைய குமாரர் சொன்னார். .

வேறு ஏட்டுச் சுவடிகள் இருந்தாலும், அவற்றைக் .ே கா ன் டு வாரு ங் க ள் ன ஐ ய ர வ ர் க ள் வேண்டினார். -

புலவரின் மகன், வீட்டுக்குள் சென்று தேடினார். அச்சுப்பிரதி உடன் கிடைக்கவில்லை. முதலில் இருபது, முப்பது ஏட்டுச் சுவடிகளைக் கொண்டுவந்து கொடுத்தார். சில கவடிகள் சுறுப்பு நூலால் கட்டப்பட்டிருந்தன: மற்றவை மஞ்சள் நூலால் கட்டப்பட்டிருந்தன. இவர் களுக்கு ஒன்றும் புரியவில்லை.

என் தகப்பனார் கவி பாடுவார். கறுப்பு நூல் கட்டின ஏடுகள் எல்லாம் பல பேர்மீது அவர் பாடின வசைக் கவிகள். மஞ்சள் கயிறு எல்லாம். சில பேர்மீது அவர்

பாடிய இசைக்கவிகள்’ எனப் புலவருடைய குமாரர் விளக்கினார். . - r

வேறு ஏட்டுச் சுவடிகளே இல்லையா?’ என

ஐயரவர்கள் கேட்டார். -

எல்லாம் இவ்வளவுதான்.” *உள்ளே போய் உன் அப்பனே அச்சிட்ட புத்தகம் எங்கே இருக்கிறது என்று பார்த்து எடுத்து வா’ என ஊர்ப் பெரிய மனிதர் அவருக்குக் கட்டளையிட்டார். அவரும் வீட்டிற்குள் சென்றார். х

ஐயரவர்கள் ஒவ்வொரு சுவடியாக எடுத்துப் படித்துப் பார்க்கத் தொடங்கினார். இவரும் பார்த்தார். உள்ளே ஒன்றையும் படிக்கவில்லை. தலைப்பில், வளையாபதி: என எழுதப்பட்டிருக்கும் சுவடி இருக்கிறதா என்று தேடிப் பார்த்தார். . . . . . .