பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 Ꮌ I * - நாம் அறிந்த கி.வா.ஜ.’

“வளையாபதி என்கிற பெயரில் ஒரு சுவடி அகப் பட்டது. புலவர் தம் கையினாலேயே எழுதியிருந்தார்: சிறிய சுவடி. -

“இதோ வளையாபதி கிடைத்துவிட்டது!’ என உள்ளக் களிப்போடு இவர், ஐயரவர்களிடம் கொடுத்தார். ஆசானும் ஆவலோடு அதனை வாங்கிப் பிரித்துப் பார்க்க லானார். பட்ட சிரமம் . வீண் போகவில்லை” என இவருக்கு மகிழ்ச்சி. - -

அடுத்த கணமே ஐயரவர்கள் புளி தின்றவரைப்போல முகத்தைச் சுளித்துக்கொண்டு, இதுதானா?’ என அதனைத் தூக்கி அப்பால் வைத்தார்.

“இந்தச் சுவடிகளில் வேறு ஏதாவது உபயோக மாவதாக இருக்கிறதா, பாரும்’ என்றார் ஐயரவர்கள். இவர் எதுவும் பேசாமல் அந்தச் சுவடிகள் ஒவ்வொன் றையும் ஆழ்ந்து படித்துப் பார்த்தார். ஒன்றும் உருப்படி யாகக் கிடைக்கவில்லை. எல்லாம் அந்தப் புலவரே எழுதிய இசைக் கவிகளும், வசைக் கவிகளுமாகவே இருந்தன.

ஐயரவர்கள் சொன்னார் : இந்தப் புலவர் வியா பாரம் செய்யும் ஒரு சாதியினரை இழிவாகப் பேசி விட்டாராம். அதற்காக இந்தப் புலவரின்மேல் வழக்குப் போட்டிருக்கிறார்கள். இவர் அந்தக் கேஸில் மாட்டிக் கொண்டுவிட்டார். நானாகச் சொல்லவில்லை, வளையா பதி காப்பியத்தில் அப்படி இருக்கிறது என்று சொல்லி இவர் வாதாடியிருக்கிறார். தாம் சொன்னதற்கு ஆதாரமாக வளையாபதி ஏட்டுச்சுவடி எங்கிருக்கிறது என்று தேடினார்; கடைசியில் மதுரையில் இருப்பது தெரிந்தது. அங்கே போய் அதை வாங்கி வந்தார். அதை இவரே அச்சுப் போட்டார்’ என்று பட்டக்காரர் சொன்னாரே, அது இந்த வளையாபதி தான் போலும்!” “அப்போது இது வளையாபதி இல்லையா?’ என மிகுந்த ஏமாற்றத்துடன் கேட்டார். இவர். -