பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 器莎2

‘இது வளையாபதி யும் இல்லை; ஒரு மண்ணும் இல்லை: இதில் 49 விருத்தங்களே உள்ளன. எல்லாம் மிகச் சாமானியமான பாடல்கள், வளையாபதி எங்கே, இவை எங்கே!’ -

இதற்கு வளையாபதி என்று ஏன் பெயர் வைத்தார்?’ “ - - -

“ஊரை ஏமாற்றத்தான்! அப்படி ஒரு கதையைக் கட்டிவிட்டு இந்தப் புலவரே இந்தப் பாடல்களை எழுதி “வளையாபதி என்று பெயர் வைத்து அச்சிட்டிருக்க வேண்டும். தம் வழக்கில் இதைக் காட்டியே அவர் வெற்றி பெற்றார் போலும் நமக்கு இதனால் ஒன்றும் பயனில்லை. நமக்கு இது வெறும் காணல் நீர்தான்!’ என்றார் ஐயரவர்கள். -

அதற்குள் புலவரின் புதல்வர் கையில் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்தார். இதோ கிடைத்துவிட்டது என்றார். - - . . -

“என்ன, மாய மானா?’ ‘ என விரக்தியோடு கேட்டுக் கொண்டே ஐயரவர்கள் அதனை வாங்கிப் பார்த்தார். வெங்காயத்தோல் போல மெல்லிய சிவப்புக் காகித அட்டையுடன் முப்பது முப்பத்திரண்டு பக்கங்களில் அது அச்சிடப்பட்டிருந்தது. ஏட்டுச் சுவடியில் இருந்த பாடல் களே வளையாபதி என்கிற பெயரில் அச்சாகி இருந்தன. அப்போது பிற்பகல் இரண்டு மணி இருக்கும். நல்ல வெயில்; இவருக்கோ மிகவும் பசித்தது. - “ஒன்றுமே சாப்பிடவில்லையே! இந்த ஊரில் ஐயர் வீடு ஒன்றும் இல்லை. நான் சாமான்கள் தரச் சொல் கிறேன். இந்தத் தம்பியைச் சமைக்கச் சொல்விச் சாப்பிட்டுவிட்டுப் போகலாம்’ என்று அந்த ஊர்ப் பெரிய மனிதர் சொன்னார். - . . .

இவருக்குத் திக் கென்றது. எப்போதோ தாமே சமைத்து ருசிகூடப் பார்க்காமல் சேந்தமங்கலத்தில் வாசம்