பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358. நாம் அறிந்த கி.வா.ஜ.

செய்திருக்கிறார். அந்தப் பழக்கமும் விட்டுப் போய். விட்டது;...இப்போது போய்த் தாம் சமைப்பதாவது!

“அதற்குள் பழையகோட்டைக்கே போய்விடலாம்’ என்றார் இவர். ஐயரவர்கள் சிரித்துக்கொண்டே, அதுவும் சரி’ என்றார். . . -

அந்தப் பட்டிக்காட்டில் பழங்கூடக் கிடைக்கவில்லை. பால் கொஞ்சம் வாங்கித் தந்தார்கள். இருவரும் அதை அருந்தினார்கள். - - .

ஐயரவர்களுக்கு அ ப் போ து மிகவும் தளர்ச்சி ஏற்பட்டது. பசியும், வெயிலின் தாபமுமே அதற்குக் காரணம் என மற்றவர்கள் எண்ணினர். அதோடு 79 வயதுநிறைந்தவர் இல்லையா? .

ஆனால் அதுமாத்திரம் காரணம் அன்று என இவருக்குத் தெரியும். வளையாபதி கிடைக்காமல் வெறும் கானல் நீராகவும், மாய மாணாகவும் போனது. தான் அவர் தளர்ந்து போனதற்கு முக்கியமான காரணம். திரும்பும்போது ஐயரவர்கள் காரில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். - o . .

இப்படி எவ்வளவோ அநுபவங்களை நான் அடைந் திருக்கிறேன். இதனாலெல்லாம் நாம் மனம் தளர்ந்து போய் நம் முயற்சியை விட்டுவிடக் கூடாது’ என இவருக்கு பூரீமத் ஐயர் அறிவுரை வழங்கலானார். பிறர் மனத்தைப் புண்படுத்ததன் ஆசான் : * -

“உங்கள் ஊர் நாகஸ்வர வித்துவான் மிகுந்த பக்தி யுடன் வாசிக்கிறாரே, இந்தமாதிரி பக்தியோடு வாசிப்ப வரை நான் எங்கும் பார்த்ததே இல்லை’ என ஐயரவர்கள் சொன்னவுடன் அங்கிருந்த அனைவருமே மகிழ்ந்தார்கள். நாகஸ்வர வித்துவானும் ஐயரவர்கள் தம்மைப் புகழ் வன்தக் கேட்டு அவரை வாத்தியத்துடன் கும்பிட்டுக் கொண்டார். ரொம்ப சிரமம்; போதும்’ என

  • 1955 மார்ச்-மஞ்சரி; கி.வா.ஜ.வின் மாயமான்."