பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - - 3.54

ஐயரவர்கள் சொன்னவுடன் அவர் மிக மகிழ்ந்து வாசிப்பை நிறுத்திக்கொண்டு அப்பால் சென்றார். -

ஒரு முறை சுவாமி தரிசனம் செய்துகொள்ள ஐயரவர்கள் ஒரு தலத்திற்குச் சென்றார். அப்போது அக்கோவில் தர்மகர்த்தா மேளவாத்தியத்துடன் ஐயரவர் களைக் கோவில் வாசலிலேயே வரவேற்றபோது நடந்த நிகழ்ச்சி இது. தர்மகர்த்தாவும் உள்ளம் பூரித்தவராக ஐயரவர்களைக் கோபுரவாசலிலிருந்து ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றார். -

ஐயரவர்களோ பெரிய சங்கீத பரம்பரையில் வந்தவர். அவ்வூர் நாகஸ்வர வித்துவானோ ஸ்வரசுத்த மாக வாசிக்க இன்னமும் பழகாதவர். என்ன, இப்படித் தப்பும் தவறுமாக வாசிக்கிறான்’ எனச் சொல்லி அந்த நேரம் தம்முடைய சங்கீத ஞானத்தை ஐயரவர்கள் வெளிப் படுத்திக்கொள்ளவில்லை. எல்லோருக்கும் மத்தியில் அந்த வித்துவானது மணமும் புண்படாமல் ஐயரவர்கள் அப்படிச் சொன்னாராம். இப்படி எதையும் நயமாகவும், மறைமுகமாகவும் சொல்வதே அவரது வழக்கம்.” -

இவரும் அவரிடமிருந்துதான் அந்தப் பழக்கத்தைக் கற்றுக்கொண்டார். -

தாம் அந்தப் பழக்கத்தை உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்த மதுரை மணி ஐயரவர்களிடமிருந்து கற்றுக் கொண்டதாக ஐயரவர்கள் சொல்வது உண்டு. - ஆசானின் கினைவுக்கு வந்த பழைய சம்பவம் :

ஒரு சமயம் அவர் ஒரு சம்ஸ்தானத்திற்குச் சென்றார். அந்தச் சம்ஸ்தானத்தில் ஒவ்வோர் ஆண்டும் நவராத்திரியின் போது ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னதானம் செய்வது வழக்கம்.

“இந்த ஆண்டு யாரையும் உட்கார வைத்து அன்னம் போட வேண்டாம். சாதத்தை உருட்டி வேண்டுமானால் கையில் கொடுத்து அனுப்பிவிடலாம். அதனால் செலவு

  • சதாபிஷேக மலர்-உ. வே. சாமிநாதையர்.