பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$55 தாம் அறிந்த கி.வா.ஜ.

குறையும்’ என்று புதிதாக வந்திருந்த சம்ஸ்தான திவான் சொல்விவிட்டார். அவர் சொன்னதை மகாராஜாவும். ஏற்றுக்கொண்டு, அப்படியே செய்யுங்கள்’ என்றார்.

இந்தச் செய்தியைக் கேட்டு நவராத்திரி லிழாவுக்கு வந்திருந்த பலரும் வருத்தம் அடைந்தார்கள். வழக்கம் போல் அன்னதானத்துடன் விழா நடைபெற வேண்டும் என்பது அவர்களது விருப்பம். விழாவுக்கு வந்திருந்த சில முக்கியமான பிரமுகர்களிடம் முறையிட்டிருக்கிறார்கள்.

“திவானும் மகாராஜாவும் முடிவு செய்த பின் அதில் நாம் போய்த் தலையிடுவது உசிதமாக இருக்காது’ என அந்தப் பிரமுகர்கள் நாசுக்காக நழுவிக்கொண்டார்கள்.

காரியம் நடந்தாக வேண்டும். யாரிடம் சொன் னால் காரியம் நடக்குமென்று கேட்க எண்ணி ஐயரவர் களிடமே சிலர் வந்து சொன்னார்கள். .

“மகாராஜா அப்படியெல்லாம். செய்ய மாட்டார். நவராத்திரி விழா வழக்கம்போல் நடைபெறும். நான் பார்த்துக்கொள்கிறேன். நீ ங் கள் கவலைப்படாமல் போகலாம்’ என்று அவர்களுக்குத் தைரியம் சொல்வி அனுப்பினார் ஐயரவர்கள். . “ ;

கொடை வள்ளல்களின் மரபிலே வந்துள்ளவர். நீங்கள். போன ஆண்டின்போது செலவைப் பார்க்காமல் இரண்டாயிரம் பே ருக்கு மே ல் நவராத்திரியின்போது அன்னதானம் அளிர்த்தீர்கள். இந்த ஆண்டு அதையும்விட அதிகமான பேர் வந்திருப்பதால் வழக்கம்போல் உண்வு: அளிக்க ஏற்பாடு செய்திருப்பதாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி’ என்று மகாராஜாவை புகழத் தொடங்கினார்.

அதைக் கேட்டவுடன் மகாராஜாவின் மனம் குளிர்ந்து விசாலமானது. புதிய திவானை உடனே கூப்பிட்டு, வழக்கம்போலவே எல்லோருக்கும் அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்’ எனச் சொல்லிவிட்டாராம்!

இப்படிப் பெரிய இடத்தில் பழகும்போது அவர்களது கோபத்திற்கு ஆளாகாமல் இங்கிதமாகவும், அதே சமயம்