பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 356.

நன்மை விளையும்படியாகவும் எப்படிப் பேசிப் பழக வேண்டும் என்பதை ஐயரவர்கள் இவருக்கு உணர்த்தினார்.

X. X . X: கணிகண்ணன் பின் சென்ற ஆழ்வாரை நினைவு கூர்தல் :

அண்ணாமலைப் பல்கலை க் கழகத்தில் தமிழ், ஆராய்ச்சித் துறைத் தலைவராக இருந்தவர் ஓய்வு பெறும் சமயத்தில் அந்த இடத்திற்கு யாரை நியமிக்கலாம் என்று ஆலோசிக்கிறபோது, வழக்கறிஞரும் இலக்கிய ஈடுபாடும் உள்ள கே. வி. கிருஷ்ணசாமி ஐயரின் கருத்தையும் கேட்டிருக்கிறார்கள். அவருக்கு உடனே, புலமையும் எழுத்தாற்றலும் மிக்க இவரது நினைவுதான் வந்தது. இவரைக் கூப்பிட்டு அனுப்பினார். இவரிடம் விவரத்தைச் சொல்வி, தி அங்கே போகிறாயா? ஐயரவர்களையும் கேட்டுக்கொண்டு உன் கருத்தைச் சொல்’ என்றார்.

இவருக்குத் தம் ஆசானை விட்டுப் போக மனமில்லை’ ஆசானிடமே போய், கே. வி. கே. அவர்கள் தம்மிடம் சொன்ன தகவலைத் தெரிவித்தார். .

ஆசானுக்கு இரண்டு மனசு: இவருக்கு நல்ல வேலை கிடைக்கிறது என்பது ஒன்று இவர் தம்மைவிட்டுப் பிரியும் படி நேரிடுமே என்கிற வருத்தம் மற்றொன்று ஆ” சிந்தையில் ஆழ்ந்திருப்பதைக் கண்டதும், * அது எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் எனக்கு வேண்டாம். தங்களைவிட்டுப் பிரிந்துபோக எனக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. நானே அவரிடம் இதைச் சொல்லிவிடுகிறேன் என்றார் இவர். . -

அவ்வளவு பெரிய மனிதர், உனக்கு நலம் செய்ய வேண்டுமென்று நினைந்து உன்னைக் கூப்பிட்டுச் சொல்வி , யிருக்கிறார். பிற்காலத்திலும் உன்னிடம் அவர் அன்பு உடையவராக இருக்கும்படி நடந்துகொள்ள வேண்டும். என்னுடன் வா. அவரைப் போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வருவோம்’ என்றார் ஆசான். . . -