பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

з57 - நாம் அறிந்த கி.வா.ஜ.

இவர் உடனே போங் ஒரு ரிக்ஷா பார்த்து வந்தார். ஆசான் இவரையும் அழைத்துக்கொண்டு கே. வி. கே-அவர் களின் வீட்டிற்குச் சென்றார். -

மிக்க மகிழ்ச்சியுடன் இவர்களை வரவேற்ற கே.வி.கே. அவர்களிடம், இந்தப் பையனிடம் உங்களுக்கு இவ்வளவு அபிமானம் இருப்பது தெரிந்து எனக்கும் சந்தோஷந்தான். அந்த வேலையைப் பார்க்கக் கூடிய தகுதி உடையவன் தான் இவன். இவனுக்கு அந்த வேலையைப் போட்டுத் தாருங்கள் எனச் சொல்லிக் கொஞ்சம் தயங்கினார் ஐயரவர்கள். -

அதற்குள் கே. வி. கே. . அவர்கள், இவரிடம் நீங்கள் வைத்திருக்கும் அன்பு எவ்வளவு என்று எங்களுக்குத் தெரி: யாதா? இவரது தகுதிக்கும், திறமைக்கும் இவரே கேட்கா விட்டாலும் நாங்களே செய்வதற்குக் கடமைப்பட்டிருக் கிறோமே! இதைச் சொல்வதற்கு நீங்கள். நேரில் வர வேண்டுமா?’ எனச் சொல்லும்போது அவரது குரல் தழு தழுத்தது. -

திருவெஃகாவில் எழுந்தருளியிருக்கும் பெருமாள், திருமழிசையாழ்வார், கணிகண்ணன் போகின்றான். நானும் போகின்றேன்” எனப் பாடிய செய்யுளைக் கேட்ட வுடன் தம்முடைய பாயலையும் சுருட்டிக்கொண்டு அவர் பின்னே சென்றாராம். அது போல் ஐயரவர்கள், அதற்கு மட்டும் நான் வரவில்லை. இவனுக்கு அந்த வேலையைப் பண்ணி வையுங்கள். அப்படியே எனக்கும் அங்கே ஒரு வேலை போட்டுத் தந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும். நானும் இவனோடு அங்கே போகிறேன் என்றார். . - உடனே கே. வி. கே.அவர்கள் வாய்விட்டுச் சிரித்து விட்டாராம்; இவரைவிட்டுப் பிரித்திருக்க ஐயரவர்களுக்கு. விருப்பமில்லை எனத் தெரிந்துகொண்டார். இவர்மேல் அவருக்கிருந்த மதிப்பும் அன்பும் பன்மடங்கு பெருகின.