பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் -

தமிழ் நாட்டிலே தரமான தமிழ்ப் பத்திரிகை ஒன்று வேண்டுமென்ற ஆவலில் தாம் தொடங்கிய பத்திரிகைப் பிரதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து கவலையுற்றார் கலைமகள் அதிபர் நாராயண சாமி ஐயர். நெருங்கிய உறவின்ர் சிலர் அதை நிறுத்தி விடும்படி யோசனை கூறினார்கள்.

சட்டென்று ஐயரவர்களின் நினைவு வரவே, நாராயண சாமி ஐயர் தியாகராஜ விலாசம் சென்று ஐயரவர்களிடம் கலந்து பேசினார். பத்திரிகையைமட்டும் நிறுத்திவிட வேண்டாம்! இப்படி இப்படியெல்லாம் செய்தால் வரவர நன்மையே உண்டாகும்’ என ஐயரவர்கள் அவருக்குச் சில் யோசனைகளைக் கூறி அனுப்பி வைத்தார்.

ஐயரவர்களிடம் பேசி வந்தபின் நாராயணசாமி ஐயர், பத்திரிகையைத் தொடர்ந்து, நடத்துவதில் உறுதி

கொண்டார். -

பத்திரிகையின் சிறப்பை எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும், அன்பர் கி. வா. ஜ.அவர்களே அதன் ஆசிரியராகத் தகுதி பெற்றவர் என்ற நம்பிக்கை தளிர்த்தது, நாராயணசாமி ஐயருக்கு. ஆரம்பம்முதல் கலைமகள்’ பத்திரிகையின் உதவி ஆசிரியராக இவர் இருந்து வருகிறார்; இதன் வளர்ச்சியில் மிக்க அக்கறை உடையவர்: சம்பளத்திற்கு வேலை செய்கிறோம் என்கிற மனோபாவமே இவரிடம் துளிக்கூட இருந்ததில்லை . இது அடிப்படையான தகுதி இல்லையா? -

மற்றொன்று: ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலை செய்வது என்றால் அதற்குச் சில தனித் திறமைகள் வேண்டும். -

“மூட் (Mood)சமாசாரம் எல்லாம் சிலருக்குஇருக்கலாம். இவரிடம் அது இருந்ததில்லை. எழுத உட்கார்ந்தால் முடித்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார். யாரேனும் வந்தால் இடையில் பலமுறை தடை ஏற்படுமே! கற்பனை தடைப்பட்டால் என்ன செய்வது?’ என்று