பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

459 . நாம் அறிந்த கி.வா.ஜ.

சொல்ல இவருக்குத் தெரியாது. பெரும்பகுதி எழுதப் பட்டிருந்தால் அதையே தொடர்ந்து எழுதி முடிப்பார். கற்பனை தானே வந்து கோத்துக்கொள்ளும். ஆரம்பித் இருந்தால் எழுதியதைக் கிழித்துப் போட்டுவிட்டுத் திரும்பவும் ஒரே மூச்சில் எழுதி முடிப்பார். போதுமே; பக்திரிகை ஆசிரியராக இருப்பதற்கு இதுவே ஒரு முக்கிய மான திறமையாயிற்றே! .

ஒரு பத்திரிகையின் ஆசிரியர் என்றால் சில நேரங்களில் முக்கியமான பிரமுகர்கள் சிலரை நேரில் பேட்டி கண்டு அவர்கள் சொல்வனவற்றைக் கோவையாக, படிக்கச் சுவை யாக எழுத வேண்டி வரும். அந்தத் திறமையும் இவரிடம் அதிகமாக இருந்தது. மற்றொரு திறமை, மாதந்தோறும் தம் ஆ சா னின் கட்டுரைகளை - அவர் கண்டதையும் கேட்டதையும் . அவர் சொல்லச் சொல்ல இவர் அவ் வாறே தெள்ளத் தெளிவாக எழுதி வந்தது. வாசகர்கள் விரும்பிப் படித்ததும், பாராட்டியதும் அந்தப் பகுதியைத் தானே!

பிற்காலத்தில் பல பிரமுகர்களை நேரில் பேட்டி கண்டு சுவையான கட்டுரைகள் பலவற்றை அதுவும்: என்ற பெயரில் எழுதி வந்தவர் இவர்தாம். .

இப்படிப் புலமையிலும், தோற்றத்திலும் பழமையைத் தழுவியவராக இருந்தாலும் புதிய வகை எழுத்தாளர் பலருக்கும் சிறந்த நண்பராகவும் இருந்தார். இப்படி இரு தரப்பினருக்கும் ஒரு பாலம்போல இவர் இருந்தது பத்தின் கைக்கு நல்லதுதானே? . ஐயரவர்களிடம் இருந்துவந்ததால், புதிய இலக்கிய வகைகளில் இவர் அப்போது அதிக ஈடுபாடு காட்டிக் கொண்டதில்லையே தவிர, அது இவருக்கு வராது, தெரியாது என்பதில்லையே! -

இவர் 1983-இல் கலைமகளில், ஒரு கதை எழுதி பிருந்தார். - 3 : . -