பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - ᏭᏮ0

முதலில் தன் மருமகள் படிப்பதில் விருப்பம் காட்டாமல் இருந்து அவளை வேலை வாங்கி வந்த மாமி யார், தன் மகன் தாராயணனின் சமயோசித யுக்தியால் மருமகளையே படிக்கச் சொல்லி ஆவலுடன் கேட்கும் அளவுக்கு மாறியதை, மனத்தத்துவ ரீதியில் ஆய்ந்து அற்புதமாக எடுத்துக் காட்டும். இவரது அரிய ஆற்றலை அதில் காணலாம். - -

இதைக் காட்டிலும் பற்பல வகைகளிலும் சிறப்பான

கதைகளை இவர் பின்னர் எழுதியிருக்கிறார். பொதுவாக, இவர் காந்தி யுகத்துடன் கலந்து வாழ்ந்தவராதலால் இவருடைய இயல்பில் சத்தியமும், அ ஹி ம் ைஸ் யும் இணைந்துவிட்டன. இவருடைய கதைகளில் மனிதத் தன்மையுடன் பொருந்திய அன்புதான் உயிராக விளங்கும். தர்மந்தான் வெல்லும்; அதர்மம் முதலில் ஓங்கினாலும் இறுதியில் அது வெல்லாது. கெட்டவன் நல்லவனாக மாறுவான்; நல்லவன் கெட்டவனாகி அழிய மாட்டான்.

கலைஞன் தியாகம், நீலமணி, அறுந்த தந்தி: என்பன போன்ற இவருடைய பல கதைத்தொகுப்புகளைப் படித்தால் இவரது கற்பனைத் திறன் புலனாகும். ருஷிய, ஆங்கில, ஜெர்மன் மொழிகளைப் போன்ற பிற மொழிகளிலும் இவருடைய சிறப்புமிக்க பல கதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. -

என்றாலும், இவரது முதல் கதையான ருசி கண்ட பூனை'யில் வரும் பாத்திரமான நாராயணன். மனைவிக் காகத்தாயையோ, தாய்க்காகத் தாரத்தையோ பகைத்துக் கொள்ளாத குணநலம் உடையவனாக இருக்கிறான்: பெண்கள் படிக்க வேண்டுமென்ற மனநலம் உடையவனாக விளங்குகிறான். தன் லட்சியம் தடைப்படுகிறபோது அதில் வெற்றி காண, பண்பட்ட அறிவோடு நிதானம் இழக் காமல் செயல்படுகிறான். . . . . .

  • தமிழ் வளர்ச்சிக் கழகப் பாராட்டுப் பத்திரம்

பெற்றது : 38 - 8. 1952 - -