பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 I - நாம் அறிந்த கி.வா.ஜ.

இவை அனைத்தும் இவரது உலக அநுபவ ஞானத்தைத் தெளிவுறக் காட்டுகின்றன என்றால் மிகையாகாது. ராஜாசர் அண்ணாமலைச் செட்டியார் கினைவுப் பரிசு :

1982 - ஆம் ஆண்டு செப்டம்பர் 30 - ஆம் தேதி அண்ணாமலைச் செட்டியாரின் 102 - ஆம் பிறந்த நாள் விழா, சென்னை அண்ணாமலை மன்றத்தில் நடை பெற்றது. அப்போது இவருக்கு அந்த ஆண்டுக்கான “அண்ணாமலைச் செட்டியார் நினைவுப் பரிசு வழங்கிக் கவுரவித்தார்கள்.

அப்போது, தமிழ் வளர்ந்து - வருவது உண்மை தான். எனினும், தமிழ்ப் பேச்சுக்கும் எழுத்துக்கும் பண் பாட்டு வரையறை அவசியமாகும். மனம் போனபடி பேசுதலும், எழுதுதலும் கூடாது’ என்றார் இவர். -

•, :பெண்களும் படிக்க வேண்டும், அடுப்பங்கரையே கதி என இருக்கக் கூடாது என்கிற எழுச்சிமிகு புதுமைக் கருத்தை நெஞ்சில் தாங்கியவர் இவர். யாரையும் பகைத்துக்கொள்கிற சுபாவம் இவரிடம் இருந்தி, தில்லை. +

ஒரு முறை ஒர் அன்பரின் வீட்டில் தங்கியிருந்தபோது அவர் இவரிடம், இன்று. உங்களுக்குப் பலகாரமா? சாப்பாடா?’ என்று கேட்டார். -

  • ஏன் என்ன விஷயம்?’ என்றார் இவர்.

எஇல்லை. இன்று திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஏகாதசி. வாக்கியப் பஞ்சாங்கப்படி துவாதசி. நீங்கள் எந்தப் பஞ்சாங்கப்படி விரதம் இருப்பீர்களோ எனக்குத் தெரியாது. அதனால்தான் கேட்டேன்’ என்றார் அவர் . - - - - - நான் யா ைர யு ம் விரோதித்துக்கொள்வதில்லை. ஆகவே, இரண்டையும் போடுங்கள்’ என்றார் இவர். கேட்ட அன்பர் உள்பட அ ைன வ ருமே சிரித்து விட்டார்கள். - - * 羲 தா-23